பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
புது எல்.பி.ஜி விநியோகிஸ்தர்களுக்கு இணைய வழி குலுக்கல் முறை தேர்வு
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2017 12:30PM by PIB Chennai
எண்ணெய் சந்தைபடுத்துதல் நிறுவங்களான இந்தியன் ஆயில் கழகம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கழகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கழகம் நாடு முழுவதும், முக்கியமாக ஊரக பகுதிகளில் எல்.பி.ஜி விநியோகத்தை மேம்படுத்தி 6000க்கும் மேற்பட்ட புதிய எல்.பி.ஜி விநியோகிஸ்தர்களை விளம்பரம் மூலம் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கூடுதல் ஆக இது செய்யப்பட்டு உள்ளது.
முதல் முறையாக எண்ணெய் சந்தைபடுத்துதல் நிறுவனங்கள்
நேர்முக தேர்வு முறையை கணினி முறையாக அமைத்துள்ளது. இதன் மூலம், விண்ணப்பங்கள் இணைய வழியில் பெற்று, முறைசெய்யப்பட்டு இணைய வழி குலுக்கல் முறை தேர்வு செய்யப்படும். இந்த முறையின் மூலம், அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவித்து, தேர்வு முறையில் அதிக வெளிப்படை தன்மை கொண்டு வரப்படும். இன்று (27.10.2017), பஞ்சாப் மாநிலத்திற்கு இந்த தேர்வு முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு 609 விண்ணப்பங்களில் இருந்து 26 விநியோகிஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் காலங்களில், நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களிலும் இணைய வழி குலுக்கல் முறை தேர்வு நடத்தப்படும்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1507732)
வருகையாளர் எண்ணிக்கை : 142