பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
நுகர்வோர் வங்கி கணக்குகளில் எல்.பி.ஜி. மானியம் செலுத்தப்படவில்லை குறித்த விளக்கவுரை
Posted On:
27 OCT 2017 5:25PM by PIB Chennai
கடந்த சில வாரங்களுக்கு, எல்.பி.ஜி. நுகர்வோருக்கு மானியம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை என்று எண்ணெய் சந்தைபடுத்துதல் நிறுனவங்கள் மற்றும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதனை சரிபார்த்தப்போது, இந்த நுகர்வோர்கள் அனைவரும் ஏர்டெல் வாடிகையாளர்கள் என்றும், இவர்கள் அனைவரும் ஏர்டெல் பெமெண்ட் வங்கியில் கணக்கு திறந்து உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. தொலைதொடர்பு சேவை நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெமெண்ட் வங்கி சேவையை தொடங்கி உள்ளது.
ஆதார் இணைக்கப்பட்ட இந்த ஏர்டெல் வாடிகையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு மானியம் வழங்கபட்டுள்ளது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மானிய பரிமாற்றம் கோட்பாடுகளின் படி, எல்.பி.ஜி மானியம் பயனாளிகளின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள சமீப வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்படும்.
எல்.பி.ஜி வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை சரி செய்யும் வகையில் எண்ணெய் சந்தைபடுத்துதல் நிறுனவங்களும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும் மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவை துறை, இந்திய தேசிய நிதி வழங்குதல் குழுமம் (என்.பி.சி.ஐ), ஏர்டெல் ஆகிய நிறுவனங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
******
(Release ID: 1507731)
Visitor Counter : 157