பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு துறையில் “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தை ஊக்குவிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் தொழில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.
Posted On:
28 OCT 2017 6:08PM by PIB Chennai
பாதுகாப்பு துறையில் “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தை ஊக்குவிக்க, இந்தியா நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்கள் ஆகியோர் அடங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் வட்ட மேஜை மாநாடு நடத்தினார். உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி, செயல்திட்ட கூட்டு மாதிரியின் அறிமுகம், அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகளை தாராளமயமாக்கல் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம வாய்ப்பு அளித்து ஆகியவற்றிற்கு அதிகபடியான முக்கியத்துவம் அளிக்கும் பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை – 2016 உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கை முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது.
பாதுகாப்பு துறை உற்பத்தியில் தனியாரின் பங்கு மற்றும் அதற்கான உரிமம், வரி மற்றும் சுங்க வரி, கொள்முதல் செயல்முறைகளை துரிதப்படுத்துதல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் முழு ஒருங்கிணைப்பு மற்றும் திறன் பயிற்சி பெற்ற மனித வளத்தை கொண்டு முறைபடுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில் சூழலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இந்த வட்ட மேஜை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தனியார் துறைக்கு சம பங்கு அளித்து நாட்டின் பாதுகாப்பு தேவைகள் நம்மிடமே இருப்பதை உறுதிபடுத்த, பாதுகாப்பு துறையில் அதிகபடியான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், உள்நாட்டு திறன் பொருள்களை உருவாக்குதல் போன்ற நோக்கத்துடன் பாதுகாப்பு துறையில் தனியார் பங்கினை ஊக்குவித்து அதற்கு உள்ள தடைகள் அனைத்தையும் தகர்க்க இந்த அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது.
வட்ட மேஜை மாநாட்டில் எழுப்பப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்துடன் உரிமம் வழங்கல், மத்திய நிதி அமைச்சகத்துடன் வரி தொடர்புடைய பிரச்சனைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய தொழில்நுட்பங்களை வணிகமையமாக்குதல், கொள்முதல் முன்மொழிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிவு செய்தல் போன்ற முக்கிய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க மத்திய பாதுகாப்பு செயலர் தலைமையிலான குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டார்.
****
(Release ID: 1507728)
Visitor Counter : 209