நிதி அமைச்சகம்
என்.எல்.சி.யின் 5% பங்கு விற்பனை மூலம் ரூ.750 கோடி திரட்ட அரசு திட்டம்
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை ஆபர் மூலம் திரட்ட மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
Posted On:
25 OCT 2017 6:11PM by PIB Chennai
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்று சதவீத சம்பங்குகளை அடிப்படை வீதத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேல் சந்தாவாக வைத்துக்கொள்ளும் விதத்தில் 2 சதவீத பங்குகளை கூடுதலாக விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.94 என்ற அடிப்படையில் சில்லறையற்ற பிரிவு விற்பனை 25-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. 3.67 கோடி பங்குகளுக்கு பதிலாக 11.63 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இதன் மூலம் மேல் சந்தா 3.19 மடங்கு அதிகரித்தது. அதன்படி .பங்கு விற்பனை அளவை மத்திய அரசு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாற்றி அமைத்தது. சில்லறைப் பிரிவில் விற்பனை 26-ம் தேதி நடைபெற்றது. சில்லறை முதலீட்டாளர்களுக்கு 3.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது.
பங்கு விற்பனைக்குப் பின்னர், என்.எல்.சி.யில் மத்திய அரசின் பங்கு 84.32 சதவீதமாக குறையும்.
***
(Release ID: 1507718)
Visitor Counter : 124