பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

25 நிறுவனங்களுக்கு நேர்மை குறியீடு உருவாக்குகிறது சி.வி.சி

Posted On: 25 OCT 2017 12:24PM by PIB Chennai

நிறுவனங்கள் மீதான விரிவான கண்காணிப்பை உறுதி செய்ய, மத்திய கண்காணிப்பு ஆணையம் ,நேர்மை குறியீடு மூலம் அடுத்த கட்ட மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. நிறுவனங்களுக்கு உள்ளே காணப்படும் நிர்வாக உறவுகள், வெளியில் அந்த நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் குறியீட்டை உருவாக்க சி.வி.சி உத்தேசித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள்,  பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், மத்திய அரசு துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு ஒருதடவை நேர்மைக் குறியீடு தரப்பட்டியல் வெளியிடப்படும். நிறுவனங்களின் நீண்டகால செயல்பாடு, திறன் மேம்பாடு, நிறுவனங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே நிலவும் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் குறியீடு அளிக்கப்படும்

இதற்காக ,ஆய்வு சார்ந்த அணுகுமுறையை சி.வி.சி பின்பற்றி வருகிறது. நேர்மைக் குறியீட்டை வகுக்க அகமதாபாத் ஐ..எம். நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி தங்களது தரத்தை நிறுவனங்கள் தெரிந்து கொண்டு அதன்படி மேம்பாட்டு நடைமுறைகளை வகுக்கமுடியும். முதல் கட்டமாக 25 நிறுவனங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக,மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் இதில் சேர்க்கப்படும். நேர்மைக் குறியீட்டை வகுப்பதில் 25 நிறுவனங்களின்  நிர்வாகங்களும் ஈடுபடுத்தப்படும்..

நேர்மைக் குறியீடு ஏற்படுத்துவதற்கான முக்கிய நோக்கம்;

  1. பொதுத்துறை நிறுவனங்களின் நேர்மையை  வரையறுப்பது
  2. நேர்மை ,அது சார்ந்த இணைப்பு அம்சங்களை அடையாளம் காண்பது
  3. இந்த அம்சங்களின் அடிப்படையில் நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிடும் நம்பகமான வழிமுறையை உருவாக்குவது
  4. செயல்பாடுகளை அளவிடும் வழிமுறையை அவ்வப்போது மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிவது
  5. பொதுத்துறை நிறுவனங்கள் நேர்மையுடன் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் உகந்த சூழலை உருவாக்குவது.

 நேர்மைக் குறியீட்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 நிறுவனங்களின் பட்டியல்

 

வரிசை எண்

பிரிவு

 

நிறுவனங்களின் பெயர்கள்

 

1

     எண்ணெய் மற்றும் வாயு

1.

..சி.எல்

 

 

 

2.

 .என்.சி.ஜி

 

 

 

 

2

எரிசக்தி     

3.

என்.டி.பி.சி

 

 

 

4.

பி.ஜி.சி..எல்

 

 

 

 

3

நிலக்கரி        

5.

ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ்

 

 

6.

வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ்

 

 

 

 

4

எஃகு

7.

எஸ்...எல்

 

5

வங்கிகள்

8.

பஞ்சாப் நேசனல் வங்கி

 

 

9.

சிண்டிகேட் வங்கி

 

 

 

 

6

போக்குவரத்து

10.

என்.எச்..

 

 

11.

மும்பை துறைமுகம்

 

 

12.

ஆர்.வி.என்.எல்.

 

 

13.

ரயில்வே

 

 

 

 

7

  சுரங்கம்  

14.

என்.எம்.டி.சி

 

 

15.

நால்கோ

 

 

 

 

8

பாதுகாப்பு

16.

பி..எல்

 

 

 

 

9

கனரக தொழில் துறை

17.

பி.எச்..எல்

 

 

 

 

10

 வர்த்தகம் மற்றும் ஜவுளி

18.

சி.சி.

 

 

 

 

11

சமூக நலப்பிரிவு       

19.

எப்.சி.

 

 

 

20.

.பி.எப்.

 

 

21.

எம்.சி.

 

 

 

 

12

தகவல் தொடர்பு 

22.

எம்.டி.என்.எல்

 

 

 

 

13

நகர்ப்புற வளர்ச்சி

மற்றும்

உள்ளாட்சி அமைப்புக்ள 

23. &

24.

டி.டி.

மற்றும்

தெற்கு எம்.சி.டி

 

 

 

 

 

11

நிதித்துறை

25.

சி.பி.டி.ட்டி

 

******


(Release ID: 1507717) Visitor Counter : 244


Read this release in: English