நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

வெங்காயம் இருப்பு மற்றும் விலை குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆய்வு

Posted On: 24 OCT 2017 5:26PM by PIB Chennai

அக்டோபர் 24, 2017 அன்று வெங்காயத்தின் இருப்பு நிலை மற்றும் விலையேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளிலும் நுகர்வோர் விவகாரங்கள் துறை (DoCA)  ஆய்வு மேற்கொண்டது. வேளாண்மைக் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காரீப் பருவத்தில், வெங்காயம் விளையும் பிரதேசங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து சந்தைக்கு வியாபார அமைப்புகள் மூலம் வெங்காயம் வந்துள்ளன. காரீப் பருவத்தில், வெங்காயம் உற்பத்தி இடத்திலேயே மிதமான விலையேற்றத்தில் காணப்பட்டுள்ளது. மழை காரணமாக வளர்ந்து நிற்கும் வெங்காயப் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றே வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.  இப்போது வெங்காயம் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து டெல்லிக்கு வரத் தொடங்கியுள்ளன. காரீப் பயிர் வருகையைப் பொறுத்து ஒரு வாரத்தில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் வெங்காய இருப்பு அதிகரிக்கவும், விலை குறைவதற்கும் டெல்லி போன்ற பகுதிகளில் வாய்ப்பு உண்டு. ரபீ பருவத்தில் இருந்து காரீப் வரை, தேவைகளை நிறைவேற்றும் வகையில் வெங்காயம் இருப்பு கைவசம் இருப்பதாக வியாபார அமைப்புகள் அறிவித்துள்ளன. அதே நேரம், எதிர்பார்க்கும் வகையில் விலை குறைவு நடக்காத பட்சத்தில் அதாவது நேர்மையற்ற நடவடிக்கையால், வெங்காய விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு தயாராக இருக்கும்படி வியாபார அமைப்புகள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன. இறக்குமதிக்கான நடவடிக்கைகள் எளிதாக்கப்படும்.

 



(Release ID: 1507291) Visitor Counter : 115


Read this release in: English