வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்,
வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு
Posted On:
24 OCT 2017 5:24PM by PIB Chennai
அறிவுசார் சொத்துரிமை ஊக்குவிப்பு மற்றும் மேலாண்மை நோக்கத்திற்காக, தொழிற்கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை (DIPP) சார்பாக, ‘சிபெம்’ (CIPAM) இணையதளத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். இந்த இணையதளம், தொழிற்கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் வழி காட்டுதலின் பேரில், தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையை சிறந்த முறை செயலாக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் தொழிற்கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை செயலாளர் திரு.ரமேஷ் அபிஷேக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த இணையதளத்தில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அனைத்து தகவல்கள், விழிப்புணர்வுகள், நிகழவிருக்கும் பயனுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் மேம்படுத்தப்படும் தகவல்கள் போன்றவை இடம் பிடிக்கும். தற்போது அறிவுசார் சொத்துரிமையின் கீழ் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்கள், தேர்ந்தெடுத்த பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் குறித்த பல்வேறு தகவல்களும் அடங்கியிருக்கும்.
அறிவுசார் உலகில் அவ்வப்போது நிகழும் செய்திகள், மாற்றங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய நிகழ்ச்சிகள், கல்வித் தகவல்களும் இந்த சிபெம் இணையதள வல்லுநர்களால் வழங்கப்படும்.
அறிவுசார் துறையில் தொடர்ந்து நிகழும் நடவடிக்கைகளான விண்ணப்பத்திற்கான புள்ளிவிபர பதிவுகள் பரிசோதனைகள், அனுமதிகள், பல்வேறு அறிவுசார் சொத்துரிமையில் எடுக்கப்பட்ட முடிவுகள் போன்ற தகவல்களும் இணையதளத்தில் இடம் பெறும். நாட்டில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக அரசு மேற்கொள்ளும் பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கை பற்றிய தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம் பெறும்.
இந்த இணைய தளத்தை பார்வையிடுவதற்கான முகவரி : www.cipam.gov.in
டுவிட்டர் மூலம் அன்றாட செய்திகளை அறிய இணைவதற்கான முகவரி : CIPAM on Twitter at @CIPAM_India
(Release ID: 1507288)
Visitor Counter : 148