சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலாவை மேம்படுத்தும் பர்யாதன் பாரி

Posted On: 22 OCT 2017 6:51PM by PIB Chennai

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ,மத்திய அரசின் இதர அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து பர்யாதன் பாரி என்னும் நாடு தழுவிய சுற்றுலா கொண்டாட்டத்தை அக்டோபர் 5 முதல் 25 வரை கொண்டாடுகிறது.நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சுற்றுலாவின் பயன்பாடு மற்றும் அனைவருக்கும் சுற்றுலா என்பதை நோக்கமாக கொண்டு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன..

இந்த 21 நாள் நிகழ்ச்சியின் கோலாகல நிறைவு விழா புதிதில்லி ராஜ்பாத் புல்வெளியில் 21-ம் தேதி முதல் 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவின் நிகழ்ச்சிகளைக் காண பொது மக்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். கலாச்சார கலை நிகழ்ச்சிகள், கைவினைப்பொருட்கள் கண்காட்சி, பலதரப்பட்ட உணவு நிலையங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்கு விருந்து அளித்தன.

பல்வேறு மாநிலங்களின் சார்பில் 50 உணவு விடுதிகள் அமைந்திருந்தன. யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதி உணவு வகைகளை பரிமாறியதுடன், இந்திய நடைபாதைக் கடைகள் சங்கத்தினர் பல்வேறு உணவு வகைகளை உண்டு மகிழ அளித்தனர். இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் ,ஹோட்டல் நிர்வாக நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தன. கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும் 50 அரங்குகள் இடம் பெற்றிருந்தன.வித ,விதமான கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த அரங்குகளை மாநில அரசுகளும்,ஜவுளி அமைச்சகம், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டு ஆணையமும் இதில் பங்கேற்றன. சுற்று லா இடங்களை இனம் காணும் 15 மாநில அரங்குகளும் இதில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 நாட்களும் நடைபெற்றன.

. மாநிங்களின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ,ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பேகம் ஸகியா ஜாகிர், ஸ்யேதா ஹமீத், ரினே சிங், பிரசாந்த் ,நிசாந்த் மல்லிக் சகோதரர்கள், சவீதா தேவி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் முக்கியமானவை ஆகும்.

நிறைவு விழாவின் துவக்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தாளியாக உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு. கே.ஜே.அல்போன்ஸ் ,சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் பங்கேற்றனர். 25-ம் தேதி மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி கலந்து கொள்கிறார். .

பர்யாதன் பாரி நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் ஆதரவும், ஊக்கமும் கிடைத்துள்ளது. நிகழ்ச்சிகளின்போது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பை பல்வேறு இடங்களில்  வந்திருந்த கூட்டம் பறைசாற்றியது.

 

***



(Release ID: 1507232) Visitor Counter : 159


Read this release in: English