பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு. மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டபிள்யூ. டில்லர்சன் சந்திப்பு
Posted On:
25 OCT 2017 6:26PM by PIB Chennai
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டபிள்யூ. டில்லர்சன் இன்று பிற்பகலில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
தற்போது அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக வந்திருக்கும் டில்லர்சனுக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தாம் நடத்திய ஆக்கபூர்வமான மற்றும் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளின் பலனாக இருதரப்பு முக்கிய பங்களிப்புகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இருதரப்பு பங்கேற்புகளுக்கான விஷயங்கள், வேகம் மற்றும் வாய்ப்புகளை பலப்படுத்தி, உத்வேகம் தருவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதில் அமைச்சர் டில்லர்சன் உறுதி தெரிவித்த கருத்தை பிரதமரும் பகிர்ந்து கொண்டார். இந்தியா - அமெரிக்க பங்களிப்பு பலப்படுத்தப்படுவது இரு நாடுகளுக்கு பயன் தருவதாக இருப்பது மட்டுமின்றி, பிராந்திய மற்றும் உலகளாவிய நிலையில் ஸ்திரத்தன்மை மற்றும் வளமை ஏற்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று இருவருமே உறுதி தெரிவித்தனர்.
அதிபர் டிரம்ப்பின் புதிய தெற்காசியக் கொள்கை சூழ்நிலையில், பயங்கரவாதம், பயங்கரவாத கட்டமைப்பு, அவர்களின் புகலிடங்கள் மற்றும் ஆதரவை அழிப்பது ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது ஆகியவற்றில் உள்ள நோக்கங்களில் பொதுவான கருத்து இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த விஷயத்தைப் பொருத்தவரையில், இந்தப் பிராந்தியத்தில் பிரதமருடன் தாம் அண்மையில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய கருத்துகளை அமைச்சர் டில்லர்சன் பகிர்ந்து கொண்டார். அனைத்து வகையிலான தீவிரவாதங்களையும் தடுப்பது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான சிறப்பான ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
முன்னதாக இன்றைய நாளில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருடனும் அமைச்சர் டில்லர்சன் விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டார்.
***
(Release ID: 1507139)
Visitor Counter : 96