பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ( முன்னரே காத்தல், தடை செய்தல் மற்றும் நிவர்த்தி செய்தல் ) சட்டம்,2013 ஐ செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
Posted On:
04 AUG 2017 3:37PM by PIB Chennai
நிறுவப்பட்ட, உடமையாக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட உரிய அரசு அல்லது உள்ளூர் நிர்வாகம் அல்லது அரசு நிறுவனம் அல்லது ஒரு பெரு நிறுவனம் அல்லது ஒரு கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்படும் அல்லது முழுமையாகவோ கணிசமாகவோ நிதியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறும் 10 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பணிபுரியும் அனைத்து துறைகள், அமைப்புகள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள், அலுவலகங்கள், கிளைகள் அல்லது பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக உட்புறப் புகார் குழு ஒன்றினை அமைக்கும்படி பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (முன்னரே காத்தல், தடை செய்தல் மற்றும் நிவர்த்தி செய்தல் ) சட்டம் ஆணை பிறப்பித்துள்ளது.
உட்புறப் புகார் குழு ஒன்றினை அமைக்கும்படி அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும், பணியில் அமர்த்துவோருக்கும் இந்தச் சட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவர்களில் எவரேனும் உட்புறப் புகார் குழுவை அமைக்கத் தவறினாலோ அல்லது அவற்றின் கீழ் அமைந்த விதிகளை மீறினாலோ, மீற முயன்றாலோ உடந்தையாக இருந்தாலோ அவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் வரையில் அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படும்.
பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் (முன்னரே காத்தல், தடை செய்தல் மற்றும் நிவர்த்தி செய்தல் ) சட்டத்தின் 23 ஆம் பிரிவு இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்துவதைக் கண்காணிக்கும் பொறுப்பைத் தொடர்புடைய அரசு நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. பதிவான மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைத் திரட்டும் மையப்படுத்தப்பட்ட அமைப்புமுறை இல்லையாதலால் அவற்றைப் பராமரிக்கவும் பொறுப்பளிக்கிறது.
இந்தச் சட்டத்தின் இணக்கத்தை அவ்வப்போது உத்தரவாதப் படுத்தும்படியும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம், அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்டரி ஆஃப் இந்தியா, பெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டரி, கான்ஃபிடரேஷன் ஆஃப் இந்தியன் சொசைட்டி, சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்டரி, மற்றும் நேஷனல் அசோசியேஷன் ஆஃப் சாஃப்ட்வேர் சர்வீசஸ் கம்பனீஸ் ஆகிய தனியார் துறை நிறுவனங்களிடமும் தங்கள் ஊழியர்களிடம் இந்தச் சட்டத்தை நன்கு நடைமுறைப்படுத்துவதை உத்தவாதப் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
2017 ஜூன் 2 ஆம் தேதி இந்தச் சட்டத்தை நன்கு நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும்,மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவுகளை ஊழியர்கள் உணரும்வண்ணம் பயிலரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் துறைகளில் அல்லது அலுவலகங்களில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தொழிலகங்கள், வியாபார அமைப்புகள், தனியார் துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் பயிலரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
* * *
மக்களவையில் இன்று எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி கிருஷ்ணா ராஜ் இந்தத் தகவலை அளித்தார்
(Release ID: 1507137)
Visitor Counter : 161