உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரின் காவலர் நினைவு தின அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2017 12:02PM by PIB Chennai

புதுதில்லி தேசிய காவலர் நினைவிடத்தில் ,காவலர் நினைவு தின அணிவகுப்பு 21-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ஶ்ரீ ராஜ்நாத் சிங் ,மனித வள மேம்பாடு, நீர்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.சத்யபால் சிங் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புலனாய்வு பிரிவு இயக்குனர் ஶ்ரீ ராஜீவ் ஜெயின் ,இந்த ஆண்டு பணியின்போது உயிர்நீத்த காவல்துறை பணியாளர்களின் பெயர்கள் முழுவதையும் வாசித்தார்.மத்திய உள்துறை செயலர் ஶ்ரீ ராஜீவ் கவ்பா , மத்திய துணை ராணுவப்படைகளின் தலைவர்கள்,தில்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிக அளவில் அணிவகுப்பில் பங்கேற்றனர். மத்திய உள்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக்கில் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் என்னுமிடத்தில் உயிர்நீத்த காவலர்களின் நினைவாக காவலர் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவலர்கள்,மத்திய துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட காவல் பிரிவினர் 383 பேர் பணியின்போது உயுர் நீத்துள்ளனர்.


 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1507136) வருகையாளர் எண்ணிக்கை : 106
இந்த வெளியீட்டை படிக்க: English