பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பெண்களுக்காக பெண்கள் – #IamThatWoman

-மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்
புதிய முழக்கம்.

Posted On: 17 OCT 2017 5:13PM by PIB Chennai

பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாட்டை களையும் புதிய முயற்சியாக, ‘நான்தான் அந்தப் பெண்எனப்படும் (#IamThatWoman) இணையவழி முழக்கத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது

இந்த முழக்கத்தின் மூலம், பெண்களுக்காக பெண்கள் செய்யக்கூடிய பல்வேறு உதவி அம்சங்களை அமைச்சகம் முன்னிலைப்படுத்துகிறது.  பெண்களுக்கு நிகழும் ஒரே மாதிரியான குற்றங்களைத் தடுப்பதற்கும், பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனிதர்களை விலக்கவும் அமைச்சகம் உறுதி எடுத்துள்ளது. இந்த வகையில், பெண்களுக்கு பெண்கள் உதவி செய்த சம்பவங்களை எழுதி, புகைப்படத்துடன் #IamThatWoman என்ற கணக்கில் ஹேஸ்டேக் செய்வதற்கு முகநூல் மற்றும் டுவிட்டர் பயனாளிகள் ஊக்கம் அளிக்கப்படுகிறார்கள்.

இந்த முழக்கம் குறித்துப் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி, ‘பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு உதவி கிடைக்கும்போது, அவளுக்கு யாராலும் தீங்கு நேராது. இந்த முழக்கத்தின் மூலம் பெண்களுக்குப் பெண்கள் உதவும் மகத்தான பங்களிப்பை வெளிச்சம் போட்டு காட்ட இருக்கிறோம். ஒரு மருமகளின் மிகச்சிறந்த துணையாக அவளது மாமியார் இருக்க முடியும். அண்ணிக்கும் மருமகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் நேரம் இது. ஒரு பெண் மேலாளரால், அவருடைய பெண் ஊழியர்களுடன் இணைந்து மகிழ்வுடன் செயல்படவும், வெற்றிக்கு வழி காட்டவும் முடியும். அதேபோன்று வாடகை வீட்டில் இருக்கும் பெண் மீது, வீட்டு உரிமையாளரான பெண் அன்பு காட்டினால், அவள் சொந்த ஊரைப் பிரிந்த சோகத்தை மறந்து, சொந்த வீட்டில் இருக்கும் உணர்வை பெற்றுவிடுவாள். அதனால் அனைவரும்  '#IamThatWoman' என்ற முழக்கத்தில் இணைவோம். இந்த செய்தியை பரப்புவதன் மூலம் பெண்களுக்குத் தடையாக இருக்கும் மலையை இன்னொரு பெண்ணால் நிச்சயம் நகர்த்திவிட முடியும்என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் இடுகைகளை கீழ்க்கண்ட இணைப்புகளுக்கு அனுப்புங்கள் :

 

Twitter Minister: @ManekaGandhiBJP;

Twitter Ministry: @MinistryWCD;

Facebook Minister: @ManekaGandhiOfficial;

Facebook Ministry: @MinistryWCD


(Release ID: 1507132)
Read this release in: English