பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சரின் அந்தமான் & நிக்கோபார் பயணம்

प्रविष्टि तिथि: 18 OCT 2017 5:59PM by PIB Chennai

பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ,இரண்டு நாள் பயணமாக அந்தமான், நிக்கோபார் படைத்தளத்துக்கு சென்றார். பாதுகாப்பு அமைச்சரை ஐ.என்.எஸ் உட்க்ரோஸ் தளத்தில், அந்தமான்,நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி.கே.ஜோஷி ,அந்தமான் & நிக்கோபர் மண்டல தலைமை தளபதி வைஸ் அட்மிரல் பிமல் வர்மா ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பின்போது, கூட்டுப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அந்தமான்,நிக்கோபார் படை தளத்தின் தலைமை அலுவலகத்துக்கு அவர் சென்றார். அப்போது, அங்குள்ள பாதுகாப்பு சூழல் குறித்து விரிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது.   

***


(रिलीज़ आईडी: 1506974) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English