பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சரின் கார்நிக்கோபார் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2017 4:30PM by PIB Chennai
பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ,தமது அந்தமான் பயணத்தின் இரண்டாவது நாளில், போர்ட் பிளேரில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளை பார்வையிட்டார். அவருடன் அந்தமான் நிக்கோபார் மண்டல தளபதி வைஸ் அட்மிரல் பிமல் வர்மா சென்றார்.
பின்னர், கார்நிக்கோபார் சென்ற பாதுகாப்பு அமைச்சர், அங்கு 2004 –ம் ஆண்டு சுனாமியின் போது உயிர்நீத்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தினார். ஜப்பான் வெல்ஸ் பகுதிக்கும் சென்ற திருமதி. நிர்மலா சீதாராமன் ,அங்கு படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1506961)
வருகையாளர் எண்ணிக்கை : 165