பிரதமர் அலுவலகம்
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை உதய தினம் – பிரதமர் வாழ்த்து
Posted On:
24 OCT 2017 9:33AM by PIB Chennai
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்தோ திபெத்திய எல்லை காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். பேரிடர் அவசரகால நடவடிக்கை, தனது துணிச்சல் மற்றும் மனிதநேய மாண்புகளுக்காக இந்த படை தனிப்புகழ் பெற்றது.
இமய மலைப்பகுதியில் தனி பிணைப்பு மற்றும் உயர் மலைப் பிரதேசத்தில் செயல்படும் வலிமையில் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை தனித்து நிற்கிறது” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
***
(Release ID: 1506851)
Visitor Counter : 126