வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ஹர்தீப் சிங் பூரி – வாழ்க்கைமுறை
மேலும் ஐந்து மாநிலங்களில் உள்ள அனைத்து நகரங்களும் சிறுநகரங்களும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதவையாக (ஓடிஎ.ப்) அறிவிக்கப்பட்டன.
ஓடிஎ.ப் என்ற மைல்கல்லை எட்டியவை மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, சத்திஷ்கர், ஜார்கண்ட், ஹரியானா
நாட்டினைத் தூய்மையாக்க ‘வாழ்க்கை முறையில் மாற்றம்’ தேவையென்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அழைப்பு விடுத்தார்
Posted On:
02 OCT 2017 12:12PM by PIB Chennai
தூய்மை பாரத இயக்கத்தின் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த இன்று மேலும் ஐந்து மாநிலங்கள் அதாவது மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா, சத்திஷ்கர், ஜார்கண்ட், ஹரியானா ஆகியவற்றின் அனைத்து நகரங்களும் சிறு நகரங்களும் ‘திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாதவை’ என்ற மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த இயக்கத்தின் மூன்றாவது ஆண்டையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி இதனை அறிவித்தார்.
நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் தூய்மை இயக்கத்தின் முன்னேற்றம் குறித்த புள்ளி விவரத்தைத் தந்த திரு பூரி நகர்ப்புற பகுதிகளில் 66 லட்சம் தனிநகர் குடியிருப்புகளில் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ஏற்கனவே 38 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் மேலும் 14 லட்சம் கழிப்பறைகள் கட்டும்பணி நடைபெற்றுவருகிறது என்றார். இயக்க இலக்கான ஐந்து லட்சம் சமூக மற்றும் பொதுக் கழிப்பிடங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய கவனக்குவிப்பு திடக் கழிவு மேலாண்மையில் இருப்பதாகக் கூறிய திரு பூரி நகர்ப்புறங்களில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த திடக்கழிவையும் பயன்படுத்தும் வகையில் நகராட்சியிலிருந்து பெறப்படும் திடக்கழிவுகளிலிருந்து 500 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யவும் 50 லட்சம் டன்னும் அதிகமாக மக்கிய உரம் தயாரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.
சுகாதாரம் என்பது பிறப்புரிமை, அதே போல் தனி நபர் பொறுப்புமாகும் என்று திரு பூரி குறிப்பிட்டார். இன்று நிறைவடையும் ‘தூய்மையே சேவை’ என்ற இருவாரகால இயக்கத்தில் நகர்ப்பகுதிகளில் 3.50 லட்சத்திற்கும் அதிகமான பணகளில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்கில் உருவான தூய்மை பாரத இயக்கத்தின் குறிக்கோளை நிறைவேற்ற ‘வாழ்க்கை முறையில் மாற்றம்’ அவசியம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.
(Release ID: 1506768)