பிரதமர் அலுவலகம்
வதோத்ராவில் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
Posted On:
22 OCT 2017 6:44PM by PIB Chennai
வதோதராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வதோத்ரா நகரத்தின் கட்டுப்பாட்டு மையத்தின் (Command Control Centre) , வாக்ஹோதியா மண்டல நீர் விநியோக திட்டம் மற்றும் பாங்க ஆப் பரோடாவின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (நகரம் மற்றும் ஊரக) பயனாளிகளுக்கு வீட்டு சாவியை வழங்கினார். பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், மண்டல நீர் விநியோக திட்டம், வீட்டு திட்டங்கள் மற்றும் மேம்பாலம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முந்த்ரா – தில்லி இடையேயான பெட்ரோலிய பொருட்கள் குழாயின் திறனை அதிகரிக்கவும் வதோதராவில் எச்.பி.சி.எல் பசுமை முனையத்தின் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர், வதோதராவில் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருக்கும் என்றும் கூறினார்.
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது, நாட்டு மக்களின் நலனுக்காக வளங்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் அரசு தெளிவாக உள்ளது.
தனது சிறு வயதில் இருந்தே கோகா பகுதியில் இருந்து பரூச் நகரின் தகேஜ் பகுதிக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு படகு சேவை இயக்கப்பட வேண்டும் என்பது குறித்து கேள்விப்பட்டு வருவதாக கூறினார். ஒட்டு மொத்த வளர்ச்சி மீது கவனம் செலுத்தி வரும் அரசு, தற்போது பயணிகள் போக்குவரத்துக்கு படகு சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளது என்றார்.
கடந்த ஆண்டுகளை போல, இந்த ஆண்டும் சர்தார் பட்டேல் பிறந்த நாளை குறிக்கும் வகையில் ‘ஒற்றுமைக்கான ஒட்டம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்றும் இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 1506762)
Visitor Counter : 124