கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கிருஷ்ணா நதியின்யோரம் முக்த்யாலாவிலிருந்து விஜயவாடா வரையிலான பகுதியின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு குடியரசு துணைத் தலைவர் அடிக்கல் நாட்டவுள்ளார்

ஆந்திரப்பிரதேசத்தில் 4,468 கோடிரூபாய் மதிப்பிலான என்எச் திட்டங்கள் அக்டோபர் 3 அன்று தொடங்கப்படுகின்றன/ அடிக்கல் நாட்டப்படுகின்றன.

Posted On: 02 OCT 2017 2:56PM by PIB Chennai

கிருஷ்ணா நதிக்கரையில் முக்த்யாலாவிலிருந்து விஜயவாடா வரையிலான (தேசிய நீர் வழிகள் - 4) மேம்பாட்டுக்கு ஆந்திரப்பிரதேசம், விஜயவாடாவில் நாளை குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு அடிக்கல் நாட்டவிருக்கிறார். 1928.46 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 415 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அவர் 2539.08 கோடி ரூபாய் மதிப்பிலான 250 கி.மீ என்.எச். திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளம், நதிமேம்பாடு மற்றும் கங்கை சீரமைப்புத்துறைகள் அமைச்சர் திரு. நிதின்கட்காரி, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

 

2016 ஏப்ரல் 14 அன்று ஆந்திரப்பிரதேச அரசுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஆந்திரப்பிரதேசத்தின் என் எச் – 4 மூன்று கட்டங்களில் மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

கட்டம் I:- முக்த்யாலாவிலிருந்து விஜயவாடா வரை (கிருஷ்ணா           

                நதி) (82 கி.மீ)

கட்டம் II:- விஜயவாடாவிலிருந்து காக்கி நாடாவரை (எலுறு

     கால்வாய் & காக்கிநாடா       கால்வாய்) மற்றும்  

     ராஜமுந்திரியிலிருந்து போலாவரம் வரையிலான

     கோதாவரி கரையோரப் பகுதி (233 கி.மீ)

கட்டம் III;- கொம்மாமூர் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும்

           கிருஷ்ணா & கோதாவரி நதிகளின் எஞ்சிய கரையோரப்

           பகுதி (573 கி.மீ)

 

2017 அக்டோபர் 3 அன்று கட்டம் I க்கு குடியரசு துணைத் தலைவர் அடிக்கல் நாட்டுவார். முக்தியாலாவிலிருந்து விஜயவாடா வரையிலான 82 கி.மீ மேம்பாட்டுக்கான இந்த கட்டத்தின் பணிகள் ஏற்கெனவே துவங்கிவிட்டன. இந்த ஆண்டு மே மாதத்தில் ஆழம் குறைவான பகுதிகளில் தூர்வாரும் பணி தொடங்கிவிட்டது, இந்தப்பணி 2019, ஜுன்வாக்கில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் இம் மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க திறன்மிக்க பொருத்தமான தீர்வை அளிக்கும். தேவைப்படும் கட்டுமானப் பொருள்கள் என்டபிள்யூ – 4 வழியாகக் கொண்டுவரப்படும் என எதிர் பார்க்கப்படுவதால் மேம்பாட்டுக் கட்டத்தின் தொடக்கத்தில் தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்கு உதவும்.

 

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக முனைய வசதி 2018 ஜுன் வாக்கில் பூர்த்தியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்த முனைய வசதிப்பணிக்கு 2018 மார்ச் வாக்கில் ஒப்புதல் கிடைக்கும் என்றும். 2019 ஜுன் வாக்கில் பணி நிறைவரையம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேர நீர்வழிப் போக்குவரத்து 2018ல் எடுத்துக்கொள்ளப்படும். முக்தியாலா, இப்ராஹிம் பட்னம், ஹரிஷ் சந்திரப்பூர் ஆகிய மூன்று இடங்களில் சரக்கு முனையங்களம் நான்கு பயணிகள் முனையங்கள் துர்கா கட்,  பவானி தீவு, வேதாதரி, அமராவதி ஆகிய இடங்களிலும் கட்டம் –Iல் என்டபிள்யூ-4 வழியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த எழு முனையங்களின் கட்டுமானத்திற்கான டிபிஆர் பூர்த்தியாகியுள்ளது.

 

மொத்தம் 1078 கி.மீ நீளமுள்ள தேசிய நீர்வழி எண் 4, 2008 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. 2016 என்டபிள்யூ சட்டத்தில் இந்த நீளம் 2890 கி.மீ என நீடிக்கப்பட்டது. இதில் கீழ்க்காணும் நீர்வழிகள் சேர்க்கப்பட்டுள்ளன:

           எ)   கோதாவரி ஆறு (பத்ராச்சலம் – ராஜமுந்திரி) = 171 கி.மீ

           பி)   கிருஷ்ணா நதி (வாசிராபாத் - விஜயவாடா) = 157 கி.மீ

           சி)   காக்கிநாடா கால்வாய் (காக்கிநாடா-ராஜமுந்திரி) =50 கி.மீ

           டி)   எலுறுகால்வாய் (ராஜமுந்திரி-விஜயவாடா) = 139 கி.மீ

           இ)   கொம்மாமூர்கால்வாய் (விஜயவாடா-பெரசுஞ்சம்)=113 கி.மீ

        எஃப்)   வடக்கு பக்கிங்காம் கால்வாய் (பெடகஞ்சம்-சென்னை)

                = 316 கி.மீ

           ஜி)  தெற்கு பக்கிங்காம் கால்வாய் (சென்னை-மரக்காணம்) =

                110 கி.மீ

           எச்)  கலுவெல்லி டேங்க் (மரக்காணம் - புதுச்சேரி) = 22 கி.மீ

                நீடிக்கப்பட்ட பகுதிகள்

           ஏ)   கிருஷ்ணா நதி (வரசிராபாத் - கலகலி) = 628 கி.மீ

           பி)   கோதாவரி ஆறு (பத்ராச்சலம் - நளசிக்) = 1184 கி.மீ

 

கட்டம் II க்கான ஆசோசனை பிஐபி / அமைச்சரவைக்கு ஐடபிள்யூஏஐ-யால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்ட அமலாக்கத்திற்காக சிறப்பு நோக்க வாகனம் (எஸ்பிவி) உருவாக்கம் ஆலோசனையும் கூட அமைச்சரவை ஒப்புதலுக்காகப் பரிசீலனையில் உள்ளது. எஸ்பிவி 2017 நவம்பருக்குள் அமைக்கப்பட்டுவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.



(Release ID: 1506735) Visitor Counter : 233


Read this release in: English