குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

காந்திஜெயந்தி அன்று தூய்மை பாரத விருதுகளைப் பிரதமர் வழங்கினார்

Posted On: 02 OCT 2017 11:55AM by PIB Chennai

தூய்மை பாரத இயக்கத்தின் மூன்றாம் ஆண்டில் தூய்மை பாரத நாளன்று, தூய்மையே சேவை என்ற இருவார நிகழ்ச்சியின் நிறைவு நாளில், குடிநீர் மற்றும் துப்பரவு (எம்.டி டபிள்யூ எஸ் ) அமைச்சகத்தால் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி தூய்மை பாரத தேசிய விருதுகளை வழங்கினார். இதன்  ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்டுரை, குறும்படம், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

காந்தி ஜெயந்திக்கு முன்னதாக நாட்டின் தூய்மை நிலையை மேம்படுத்துவதற்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நாட்டுக் குடிமக்களுக்குப் பிரதமரால் விடுவிக்கப்பட்ட எழுச்சிமிகு அழைப்பை ஏற்று  எம்.டி டபிள்யூ எஸ் ’தூய்மையே சேவை’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த தேசிய இயக்கத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

பிரதமர் தமது உரையில் தூய பாரதத்தை உருவாக்கும் பாதையில் குறுக்கிடும் சவால்களை மக்களின் பங்கேற்புடன் வெற்றி கொள்வது பற்றி பேசினார். வரலாற்றில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்தாலும் தூய்மை என்பதை நனவாக்க இயலாது. அதற்காக 125 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து வரும்போது மட்டும் தான் அது சாத்தியமாகும். இந்த இயக்கத்தில் இதுவரை அடைந்துள்ள வெற்றிகள் அரசின் தனித்த செயல்பாட்டால் அல்ல; தூய்மை இந்தியா என்ற கனவை தங்களுடையதாக இந்திய மக்கள் ஆக்கிக் கொண்டதால்தான்.

 

இந்த இயக்கம் பற்றிய விமர்சனங்கள் குறித்துப் பேசிய பிரதமர் கழிப்பிடங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறுகின்றன. இவ்வாறு நடப்பது உண்மைதான் என்று கூறிய அவர் தனக்கே அப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறது என்றார். இருப்பினும் மக்களின் பங்களிப்பை வெளிச்சமிடுவது அவசியம் என்றும் இத்தகைய உதாரணங்களைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். தூய்மை என்பது தங்களின் பொறுப்பு என்பதை உணர்ந்து ஒவ்வொரு வீட்டுக் காரரும் கழிப்பறை கட்டும் வரை தூய்மை பாரதக் கனவு நிறைவேறாது.

 

குழந்தைகளும் இளைஞர்களும் இதற்கு சிறந்த தூதர்கள் என்று அவர் கூறினார். தூய்மை என்ற சிந்தனைப் பரட்சிக்கு வழிவகுக்கும் போட்டிகளில் பங்கேற்று நாடு முழுவதும் உள்ள சிறார்களாலும் இளைஞர்களாலும் செய்யப்ட்ட பணிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தச் சிந்தனைப் புரட்சிக்கு ஆதரவளிப்பதில் ஊடகம் மற்றும் மக்கள் சமூகத்தின் பங்கு பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார். தேசத்தின் கூட்டுக் கனவு நனவாக நல்ல பணிகள் தொடர்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

 

வீடுகளில் தூய்மையைப் பாரமரிப்பதில் பெண்களின் பங்கு பற்றிப் பேசிய பிரதமர், வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் பங்களிப்பின் மூலம் இந்தப் பணிக்கு அவர்களுக்கு ஆதரவு அளிப்பது அவசியம் என்றார். வீட்டிலுள்ள கழிப்பறைகளும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாகவும் செயல்படும் விதத்திலும் இருப்பதை உறுதி செய்ய இந்தச் சமூகம் குறிப்பாக ஆண்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது பற்றியும் மிக முக்கியமாக வயது வந்த பெண்கள் படிப்பைப் பாதியில் கைவிடாமல் இருப்பதை உறுதி செய்ய பள்ளிக் கழிப்பறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவர் பேசினார். போதிய சுகாதாரம் இல்லாததால் ஒரு ஏழைக் குடும்பம் ஆண்டுக்குக் கூடுதலாக 50,000 ரூபாய் செலவுச் சுமையை தாங்க வேண்டியுள்ளது என்ற யுனிசெப் ஆய்வு முடிவுகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

 

முன்னதாக தூய்மை பாரத இயக்கத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தூய்மையே சேவை என்ற இயக்கத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கும் பலவகை ஊடகம் கண்காட்சியை நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் பிரதமர்  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் செல்வி ஊமாபாரதி வெற்றியாளர்களைப் பாராட்டினார். அவர்கள் வாழும் பகுதியில் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் சுகாதார முன் முயற்சிகளைத் தொடருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் 6 மாநிலங்கள், 214 மாவட்டங்கள், 254,000 கிராமங்களில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதவை என அறிவிக்கும் வகையில் தூய்மை பாரத இயக்கம் மனவெழுச்சி ஏற்படுத்தும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.

 

வரவேற்புரையாற்றிய டிடபிள்யூஎஸ் துறையின் இணை அமைச்சர் திரு எஸ் எஸ். அலுவாலியா, கிராமப்புற இந்தியாவில் தூய்மைப் பணி 69% அதிகரித்துள்ளது; 2019 வாக்கில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் கிராமப்புற தூய்மை பாரத இயக்கம் நன்கு செயல்பட்டு வருகிறது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

 

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், என்சிசி மாணவப் படையினர், பள்ளிச்சிறார்கள் ஆகியோரும் நிகழ்ச்சியல் கலந்து கொண்டனர்.

 

 

 

*****



(Release ID: 1506723) Visitor Counter : 360


Read this release in: English