குடியரசுத் தலைவர் செயலகம்

போர்பந்தரில் உள்ள கீர்த்தி மந்திருக்கு குடியரசுத் தலைவர் பயணம்; திறந்தவெளி கழிப்பிட மற்ற ஊரக குஜராத் என்பதை அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

Posted On: 02 OCT 2017 1:34PM by PIB Chennai

மகாத்மா காந்தி பிறந்த இடமான போர்பந்தரில் உள்ள கீர்த்திமந்திருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (அக்டோபர் 2, 2017) பயணம் செய்தார். காந்தி ஜெயந்தி நாளில் பாபுஜிக்கு அவர் புகழஞ்சலி செலுத்தினார். பின்னர், கீர்த்திமந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமப்புற குஜராத் என்பதை அறிவிப்பதற்கான நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

     மகாத்மா காந்தி பிறந்த இடத்திற்கு இந்தப் புனிதநாளில் தாம் பயணம் செய்திருப்பது தமக்குப் பெருமையாக உள்ளது என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறினார். திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமப்புற குஜராத் என்ற இலக்கினை எட்டியிருப்பதன் மூலம், குஜராத் காந்திஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியிருக்கிறது என்றார். இந்த சாதணைக்காக குஜராத் முதலமைச்சருக்கும் அவரது ஒட்டு மொத்த குழுவினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

     தூய்மை என்பது சுகாதாரப்பணியாளர்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் மட்டும் பொறுப்பானதல்ல என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது பலத்தரப்பினரும் பங்கேற்க வேண்டிய தேசிய இயக்கமாகும் என்றார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால், கழிப்பறைகளைத் தாமே சுத்தம் செய்வதன் மூலம் இதனை உணர்ந்த காந்திஜி முயற்சி செய்தார். தூய்மை பாரத இயக்கத்தின் இலக்குகளை அக்டோபர் 2, 2019 வாக்கில் எட்டுவது தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டில் அவருக்கு செய்யும் பொருத்தமான புகழஞ்சலியாகும். குஜராத்தின் இன்றைய சாதனை தூய்மை இந்தியா அல்லது ஸ்வச் பாரத்தை நோக்கிய மிகப்பெரிய முன்னெடுப்பாகும்.

     சர்தார் படேலின் பிறந்தநாளும் இம்மாதம், அக்டோபர் 31 –ல் வருவதை குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார். நமது விடுதலை இயக்கத்தின் தலைவராக மகாத்மா காந்தி இருந்த போது தேச ஒற்றுமையின் சிற்பியாக சர்தார் படேல் இருந்தார் என்று அவர் கூறினார். பாபுஜி மற்றும் சர்தார் படேலின் பங்களிப்புகள் இல்லாமல் நவீன இந்தியாவைக் கற்பனை செய்வது சாத்தயிமல்ல. இந்த இரண்டு மாமனிதர்களும் இந்தியாவுக்கு குஜராத் வழங்கிய பரிசுகள் என்றார்.

******


(Release ID: 1506719)
Read this release in: English