பிரதமர் அலுவலகம்

இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் தாரிணி குழுவினருக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2017 6:23PM by PIB Chennai

தற்போது உலக சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய கடற்படை பாய்மர கப்பல் (ஐ.என்.எஸ்.வி) தாரிணி குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி அழைப்பு மூலம் பேசினார்.

ஐ.என்.எஸ்.வி தாரிணி பயணக் குழுவினருக்கு பிரதமர் நாட்டின் சார்பாக தீபாவளி வாழ்த்தினை தெரிவித்தார். மேலும், அவர்கள் இந்த சுற்று பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும் வாழ்த்து தெரிவித்தார்.

ஐ.என்.எஸ்.வி தாரிணி குழுவினர் தங்களது 22,100 கடல் மைல் தூர பயணத்தை தொடங்கும் முன் பிரதமர் இவர்களை ஆகஸ்ட் 16, 1017 அன்று நேரில் சந்தித்து பேசினார். அக்டோபர் 22, 2017 அன்று  ஐ.என்.எஸ்.வி தாரிணி 4770 கடல் மைல் தூரத்தை பயணித்து ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிமாண்டிலில் தனது முதல் நிறுத்த தளத்தை அடைய உள்ளது.

மேலும், விரைவில் பிறந்தநாள் காண உள்ள குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் லெப்டினன்ட் காமாண்டர் வர்டிகா ஜோஷி மற்றும் லெப்டி. பியால் குப்தா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1506635) வருகையாளர் எண்ணிக்கை : 149
இந்த வெளியீட்டை படிக்க: English