குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

காந்திஜியின் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும். குடியரசு துணைத் தலைவர்

மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார்

Posted On: 02 OCT 2017 11:28AM by PIB Chennai

காந்திஜியின் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும், எந்தவகையிலும் பாகுபாடு இல்லாது அனைவரும் சமமாக இருக்கிற ‘ராம ராஜ்ய’ த்தை நிர்மாணிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். 148 – வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைத்தபின் தயானந்த வித்யாலயா பள்ளியிலிருந்து வந்த குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார். 1.8 மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலை ராஜ் காட் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முதலாவது சிலையாகும். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி மற்றும் பல பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

காந்திஜியின் சிந்தனைகள் அழிவற்றவை. அவரது ராமராஜ்ய விருப்பத்தை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசுகளும் மக்களும் அந்தத் திசையில் பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். ராமராஜ்யம் என்பதொரு லட்சிய அரசு, அங்கே அச்சமிருக்காது, பசியிருக்காது, ஊழல் இருக்காது, சுரண்டல் இருக்காது, பாகுபாடு இருக்காது என்று அவர் மேலும் கூறினார். மகாத்மா காந்திஜியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ராமராஜ்ய லட்சியத்திற்காக நாம் அனைவரும் பாடுபட  வேண்டும். பல்வேறு நிலைகளில் உள்ள நமது கடமையுமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வளாகத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் விளக்க நிகழ்வு மையம் ஒன்றை குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைத்தார். எல்.இடி திரைகளில் டிஜிட்டல் காட்சிகள் மூலம் மகாத்மாவின் வாழ்க்கையையும் பணிகளையும் கலந்துரையாடி கற்கும் வசதி இந்த மையத்தில் உள்ளது. பார்வையாளர்கள் திரைப்படங்களைவும் வாழ்க்கை நிகழ்வுகளையும் காண முடியும். காந்திஜியின் பேச்சுக்களை கேட்க முடியம். இதுதவிர இடையூறின்றி கலந்துரையாக ஈயர் ஃபோனைப் பயன்படும் வினாடி-வினா நிகழ்ச்சியிலும் பற்கேற்கலாம்.

பார்வையாளர்கள் அறை, பதிப்புப் பிரிவு, ஊழியர் அறை, குடிநீர் வசதி ஆகியவற்றைக் கொண்ட ராஜ்காட் சமாதிக் குழுவின் புதிய நிர்வாகப் பிரிவையும் குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார்.

 



(Release ID: 1506629) Visitor Counter : 128


Read this release in: English