நிதி அமைச்சகம்

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுவின் முடிவை அரசு கவனத்தில் கொண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2017 5:04PM by PIB Chennai

வட்டி விகிதங்கள் மற்றும் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுவின் முடிவை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது நான்காவது இருமாதகால நிதிக்கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு;

நிதிக்கொள்கை குழு, பின்வரும் காரணங்களை ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். (1) 2017-18 –ம் ஆண்டுக்கான உண்மையான ஒட்டுமொத்த வளர்ச்சி விகித மதிப்பீடு 7.3 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளி (2) 2017-18-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான கணிப்பில் ,4 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்த ஆண்டின் சராசரி பணவீக்க விகிதத்தில் ஏறுமுகம் காணப்படுவதால் நிதிக்கொள்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான நிதி உதவி ஒழுங்குமுறைகளை இறுதி செய்வது உள்ளிட்ட முன்முயற்சிகளை அரசு வரவேற்கிறது.அரசு நிறுவனங்களின் சில்லறைப் பங்கு பரிவர்த்தனையில் பங்குச் சந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபடுவதும் வரவேற்கப்படுகிறது.


(வெளியீட்டு அடையாள எண்: 1506218) வருகையாளர் எண்ணிக்கை : 144
இந்த வெளியீட்டை படிக்க: English