| 
                        எரிசக்தி அமைச்சகம்
                         
                         
                        
                            உஜாலா திட்டத்தின் கீழ் இந்தியாவெங்கிலுமுள்ள 36 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இ இ எஸ் எல் மூலம் 25.28 கோடி எல் இ டி பல்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
                         
                        
                         
                        
                            ஆண்டுக்கு 32.84 பில்லியன் கே டபிள்யூ எச் க்கும் மேற்பட்ட சக்தி சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6575 மெகாவாட் பயன்பாடு அதிகம் உள்ள தேவை தவிர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 26.60 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு ஜிஎச்ஜி உமிழ்வுக் குறைப்பு  நிகழ்கிறது. 
                         
                        
                         
                        
                            Posted On:
                        03 AUG 2017 3:22PM by PIB Chennai
                         
                        
                         
                        
                            மின்சாரம், நிலக்கரி, புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறை இணையமைச்சர் (பொறுப்பு) திரு. பியுஷ் கோயல் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 1, ஆகஸ்ட்,2017  அன்றைய நிலவரப்படி,  , எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீசஸ் லிமிடெட்  (இ இ எஸ் எல்) 25.28 கோடி எல் இ டி பல்புகளை விற்பனை செய்துள்ளது என்ற தகவலைத் தெரிவித்தார். 
மார்ச், 2019 க்குள் வெப்பத்தை வெளியிடும் 77 கோடி பல்புகளை மாற்றி, 
 எல் இ டி பல்புகளைப் பொருத்தும் அரசின் இலக்கை எட்டும் நோக்கில் நாடெங்கிலுமுள்ள வீட்டு நுகர்வோர்களிடம் தனியார் துறையும் 41.44 கோடி எல் இ டி பல்புகளை ஜூன், 2017 வரை விற்றிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
மேலும், 1, ஆகஸ்ட்,2017 அன்றைய நிலவரப்படி, 25.28 கோடி எல் இ டி  பல்புகளை இந்தியாவின் 36 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இ இ எஸ் எல் விற்பனை செய்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார், இதன் விளைவாக ஆண்டுக்கு உத்தேசமாக 32.84 பில்லியன் கே டபிள்யூ எச் க்கும் மேற்பட்ட சக்தி சேமிப்பும், 6575 மெகாவாட் பயன்பாடு அதிக தேவை தவிர்ப்புடன் ஆண்டுக்கு 26.60 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு ஜிஎச்ஜி உமிழ்வுக் குறைப்பும்  நிகழ்கிறது. கூடுதலாக, தனியார் துறையின் மூலம் எல் இ டி பல்புகள் விற்கப்பட்டதன் காரணமாக சேமிப்பும் ஏற்படுகிறது.. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக நிகழும் சக்திச் சேமிப்பு வருமாறு : 
  
 
	
		
			| 
			 வ. 
			எண்                
			 | 
			
			 .மாநிலங்கள் /  
			யூனி,பிரதேசங்கள்    
			 | 
			
			 வினியோகிக்கப்பட்ட எல் இ டி 
			பல்புகளின் 
			எண்ணிக்கை                                                    
			 | 
			
			 மதிப்பிடப்படும் 
			சக்தி சேமிப்பு  
			ஆண்டுக்கு 
			 | 
			
			 தவிர்க்கப்படும் 
			உத்தேச 
			உச்சத்தேவை 
			 | 
		 
		
			| 
			 1 
			 | 
			
			 அந்தமான் நிகோபர்             
			 | 
			
			 4,00,000         
			 | 
			
			 52.00    
			 | 
			
			 10.39                                                                                                                       
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ஆந்திரப் பிரதேசம்                                                                                                                                   
			 | 
			
			 2,16,77,316       
			 | 
			
			 2,818.02     
			 | 
			
			 563.04         
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 அருணாச்சலப் பிரதேசம்                   
			 | 
			
			 8,985          
			 | 
			
			 0.41       
			 | 
			
			 0.08                          
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 அசாம் 
			 | 
			
			 15,31,046         
			 | 
			
			 199.04      
			 | 
			
			 39.77 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 பீகார்  
			 | 
			
			 1,39,36,861       
			 | 
			
			 1,806.39     
			 | 
			
			 360.92 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 சண்டிகர்  
			 | 
			
			 2,35,859         
			 | 
			
			 30.66       
			 | 
			
			 6.13 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 சத்திஸ்கர் 
			 | 
			
			 84,60,396       
			 | 
			
			 1,089.87     
			 | 
			
			 217.76 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 தத்ரா & நாகர் 
			ஹவேலி                     
			 | 
			
			 1,35,667         
			 | 
			
			 17.64       
			 | 
			
			 3.52 
			  
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 டாமன் & டயூ                
			 | 
			
			 1,35,924         
			 | 
			
			 17.67         
			 | 
			
			 3.53 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 டெல்லி 
			 | 
			
			 1,16,15,917       
			 | 
			
			 1,507.74       
			 | 
			
			 301.25 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 கோவா 
			 | 
			
			 8,20,333         
			 | 
			
			 106.64        
			 | 
			
			 21.31 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 குஜராத்                     
			 | 
			
			 3,59,88,490        
			 | 
			
			 4,671.01       
			 | 
			
			 933.27 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ஹரியானா  
			 | 
			
			 1,26,63,682        
			 | 
			
			 1,639.07       
			 | 
			
			 327.49 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ஹிமாச்சலப் பிரதேசம்        
			 | 
			
			 76,27,735         
			 | 
			
			 991.61       
			 | 
			
			 198.12 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ஜம்மு & காஷ்மீர்             
			 | 
			
			 76,89,954         
			 | 
			
			 999.69       
			 | 
			
			 199.74 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ஜார்கண்ட் 
			 | 
			
			 1,01,88,680        
			 | 
			
			 1,324.11       
			 | 
			
			 264.56 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 கர்நாடகம் 
			 | 
			
			 1,65,04,010        
			 | 
			
			 2,138.93       
			 | 
			
			 427.36 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 கேரளம் 
			 | 
			
			 1,01,19,390        
			 | 
			
			 1,315.52       
			 | 
			
			 262.84 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 லட்சத் தீவுகள்                 
			 | 
			
			 1,00,000          
			 | 
			
			 13.00         
			 | 
			
			 2.60 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மத்தியப் பிரதேசம்            
			 | 
			
			 1,40,20,204        
			 | 
			
			 1,814.84       
			 | 
			
			 362.61 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மஹாராஷ்டிரம் 
			 | 
			
			 2,12,92,816        
			 | 
			
			 2,768.07       
			 | 
			
			 553.06 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மணிப்பூர்                        
			 | 
			
			 19,965           
			 | 
			
			 2.60         
			 | 
			
			 0.52 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மேகாலயா 
			 | 
			
			 2,48,608          
			 | 
			
			 31.71         
			 | 
			
			 6.34 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மிசோரம் 
			 | 
			
			 5,28,624         
			 | 
			
			 68.25        
			 | 
			
			 13.64 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 நாகாலாந்து 
			 | 
			
			 4,59,769         
			 | 
			
			 59.77        
			 | 
			
			 11.94 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ஒடிசா  
			 | 
			
			 1,07,68,272        
			 | 
			
			 1,395.46        
			 | 
			
			 278.81 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 புதுச்சேரி 
			 | 
			
			 6,09,251 
			 | 
			
			 79.20         
			 | 
			
			 15.82 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 பஞ்சாப் 
			 | 
			
			 1,18,191         
			 | 
			
			 14.91         
			 | 
			
			 2.98 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 ராஜஸ்தான்                
			 | 
			
			 1,36,22,341       
			 | 
			
			 1,768.22       
			 | 
			
			 353.29 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 சிக்கிம் 
			 | 
			
			 1,05,148         
			 | 
			
			 13.67         
			 | 
			
			 2.73 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 தமிழ்நாடு 
			 | 
			
			 4,97,119         
			 | 
			
			 61.81        
			 | 
			
			 12.35 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 தெலங்கானா 
			 | 
			
			 13,40,472       
			 | 
			
			 172.89        
			 | 
			
			 34.54                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 திரிபுரா 
			 | 
			
			 5,71,570        
			 | 
			
			 74.30        
			 | 
			
			 14.85 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 உத்தரப் பிரதேசம்          
			 | 
			
			 1,96,68,086      
			 | 
			
			 2,543.85       
			 | 
			
			 508.26 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 உத்தரகாண்ட்                 
			 | 
			
			 38,61,511       
			 | 
			
			 499.79        
			 | 
			
			 99.86 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மேற்கு வங்காளம்            
			 | 
			
			 52,88,707       
			 | 
			
			 678.43       
			 | 
			
			 135.55 
			 | 
		 
		
			| 
			   
			 | 
			
			 மொத்தம் 
			 | 
			
			 25,28,60,899      
			 | 
			
			 32,846.78       
			 | 
			
			 6,575.81 
			 | 
		 
	
 
பி ஐ எஸ் விவரக்குறிப்பு ஐ எஸ் 16102 ( பகுதி 2 ) க்கு  இ இ எஸ் எல் – இன் கொள்முதல் உறுதிப்படுத்துதலையும் திரு,கோயல் அறிவித்தார் : சுய நிலைப்படுத்து விளக்குகளின் 2012   செயல்திறன் சேவைகள். மேலும். இந்த பல்புகள் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகச் செயல்படாமல் போனால் அவற்றை 3 ஆண்டுகள் வரை இலவசமாக மாற்றித்தரும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எல் இ டி பல்புகளின் தரத்தை உத்தரவாதப்படுத்தும் விதமாகக் கடுமையான தரப் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. அதிகமாகக் கட்டணம் விதிக்கப்படுவதாகவோ உஜாலா திட்டத்தின் கீழ் உள்ள வினியோக நிறுவனத்தினர்கள் ஆர்வமில்லாமல் செயல்படுகிறார்கள் என்றோ இதுவரை புகார் எதுவும் வரவில்லை. இதுபோன்று பிரச்சினைகள் எதுவும் எழுந்தால், அவற்றை நிவர்த்தி செய்வற்காகக் களக் கண்காணிப்புப் பணியாளர்களை இ இ எஸ் எல் நியமித்திருக்கிறது என்றும் அமைச்சர்  தெரிவித்தார். 
  உஜாலா திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தேவைகளைக் கணக்கிட்டு,  , வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் போட்டி ஏலம் மூலம் இ இ எஸ் எல் குறைந்த விலைக்கு எல் இ டி பல்புகளைக் கொள்முதல் செய்யும் என்றும் திரு.கோயல் தெரிவித்தார். மீட்டர் இணைப்புள்ள நுகர்வோர்கள்,  நாடெங்கும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள,  இதற்கென நியமிக்கப்பட்டுள்ள வினியோக மையங்களிலிருந்து எல் இ டி பல்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் . உஜாலா திட்டத்தின் கீழ் இந்தியாவெங்கும் 36 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் முன்கூட்டியே பணம் செலுத்தி வாங்கும் விதத்திலும், பில் கொடுத்த பிறகு தொகை செலுத்தும் விதத்திலும் எல் இ டி பல்புகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. 
                         
                        
                         
                        
                         
                        
                            (Release ID: 1506215)
                         
                        
                         
                     |