நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மின்னணு ஊடகங்களில் திசை திருப்பும் விளம்பரங்கள்

प्रविष्टि तिथि: 04 AUG 2017 5:28PM by PIB Chennai

தொலைக்காட்சிகள், வானொலி,இணையதளங்கள், போன்ற மின்னணு ஊடகங்கள், சுவர்விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள், பதாகைகள், மற்றும் நாளிதழ்களில் வெளியிடப்படும் அவதூறு விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க இணையதளம்வழி குறைதீர் அமைப்பு ஒன்றை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் மார்ச் 2015ல் தொடங்கி உள்ளது. அந்த பதிவு செய்யப்பட்ட இணையதளத்தில் இதுவரை பதிவாகி உள்ள புகார்களின் விவரங்கள் வருமாறு-

காலம்  

பெறப்பட்ட மொத்த புகார்கள்

15-03-2015முதல்31-12-2015 வரை               

641

1-01-2016 முதல் 31-12-2016 வரை

2032

1-01-2017 முதல் 2-08-2017 வரை

1846

மொத்தம்

4519

 

இணையதள அமைப்பு மூலமாக பெறப்பட்ட புகார்களை இந்திய விளம்பரங்கள் தர கவுன்சில்  (ஏ,எஸ்.சி.ஐ.)மத்திய நுகர்வோர் விவகாரத்துறையுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பரிசீலனை செய்யும். .  தீர்க்கப்படாத மனுக்கள் ஏ.எஸ்.சி.ஐ. அமைப்புக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட துறைகள் மூலமான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி மொத்தமுள்ள 4519 புகார்களில் 2106 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுவிட்டது.947 புகார்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.  எஞ்சிய புகார்கள் மத்திய அமைச்சர்கள், மற்றும் துறைகளுக்கு தேவையான மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

இதுதவிர செயற்கைக்கோள் ஒளிபரப்பு மூலம் இயங்கும் தனியார் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களின் தன்மை குறித்து அதற்கான விதிகள் படி மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் mib.nic.in. கீழ் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ஒரு அமைச்சரகங்களுக்கிடையிலான குழுவை அமைத்துள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான இந்த குழுவில் நுகர்வோர் விவகாரத்துறை, உள்துறை , சட்டம் மற்றும் நீதித்துறை,  மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும்  ஏ,எஸ்.சி.ஐ அமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.  நிகழ்ச்சி விதிகளுக்குமாறான விளம்பரங்கள் தொடர்பாக இந்த அமைப்பு தாமாகவோ அல்லது புகார்களின் அடிப்படையிலோ நடவடிக்கை எடுக்கும்.

இந்த தகவலை மத்திய நுகர்வோர் விவகாரம்உணவு மற்றும் பொதுவினியோகத்துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்திரி மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்திருக்கிறார்.


(रिलीज़ आईडी: 1506190) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English