பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ஐஎன்ஏ, டில்லி ஹாட்டில் ’பெண்களுக்கான இந்திய இயற்கைப் பொருள் விழா’ வின் 3 வது ஆண்டு நிகழ்ச்சியை திருமதி மேனகா சஞ்சய் காந்தி தொடங்கிவைத்தார்.

”பெண்களுக்கு நல்லது, இந்தியாவுக்கு நல்லது, உங்களுக்கு நல்லது!”

Posted On: 01 OCT 2017 7:13PM by PIB Chennai

ஐஎன்ஏ, டில்லி ஹாட்டில் இன்று ”பெண்களுக்கான இந்திய இயற்கைப் பொருள் விழா” வின் 3 வது ஆண்டு நிகழ்ச்சியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு வீரேந்திரகுமார் முன்னிலையில்  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி தொடங்கிவைத்தார். அக்டோபர் 15 வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் உணவு, உடல்நலம், தனிநபர் கவனிப்பு,  வீட்டு மேம்பாடு, சமையலறை உரங்கள், இயற்கைப் பொருட்கள் 530 பங்கேற்பாளர்களால் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தில்லியிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஒப்பில்லாத தங்களின் வணிகப் பொருள்களைக் காட்சிப்படுத்த பெரும்பாலான பெண்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து தில்லிக்கு முதன் முறையாகப் பயணம் செய்து வந்திருக்கிறார்கள்.

இயற்கை முறை உணவு வழி செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருமதி மேனகா காந்தி, ”ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், பதனப் பொருட்களுடன் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை விட இயற்கை முறையிலான உணவில் மிக அதிகமாக விட்டமின்களும், தாதுப்பொருள்களும், ஊட்டச்சத்துகளும் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியிலும் கூட சாகுபடி செலவு 20-40% குறைவதால் இயற்கை முறை வேளாண்மை உகந்ததாகும். உற்பத்தித் தரம் உயர்வதால் விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கிறது. அதேபோல் மண்ணின் தரமும் மேம்படுகிறது. அனைத்துக்கும் மேலாக பூச்சிக்கொல்லி மருந்தின் ஆபத்தான விளைவுகள் குறிப்பாக குழந்தைகளை எளிதில் தாக்கும். இயற்கைமுறை உற்பத்திப் பொருள்கள் தற்போது கட்டுபடியாகக் கூடியவை என்ற நிலையோடு நீடித்து நிற்கும் மாற்றினை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், விவசாயிகளின் நிதிநிலையையும் அதேபோல் நுகர்வோரின். குறிப்பாக ”குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் அதிகரிக்கலாம்.”

’பெண்களுக்கு நல்லது, இந்தியாவுக்கு நல்லது, உங்களுக்கு நல்லது’ என்ற கருப்பொருளோடு இயற்கை முறை பொருள்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பயன்களை வெளிப்படுத்தவும், அதில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மேடையை உருவாக்கவும், இந்தியாவின் மிகவும் தொலைதூரப் பகுதிகளிலிருந்து உற்பத்தியிலும் ஈடுபடும் பெண்களுக்கு நீடித்த மற்றும் எளிதில் அடையத்தக்க விற்பனை அங்காடிகளை அமைத்து மேம்படுத்தவும் அமைச்சகம் எண்ணியுள்ளது.

இயற்கை முறையில் உற்பத்தியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கிராமப்புற பெண்கள் தவிர ப்ரோ நேச்சர் ஆர்கானிக்ஸ், ஹிம் ஃப்ரஷ் ஆர்கானிக்ஸ், அவ்ரா ஹெர்பல் டெக்ஸ்டைல்ஸ், சோனால் ஒயிட்கப், சூத்ரப்யூர் ஆயுர்வேதா, ரியல்லைஃப் ஆர்கானிக், குணா ஆர்கானிக்ஸ், பண்டோரா ஆர்கானிக்ஸ், க்வின்டா எசன் ஷியா ஆர்கானிக், நூரிஷ் ஆர்கானிக்ஸ், போன்ற பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த பெண்களும் பங்கேற்றனர். இவற்றின் பங்கேற்பு பரந்த வாழ்க்கை முறையோடு மேலும் மதிப்பைக் கூட்டியதோடு தனிப்பட்ட கவனிப்பு நிலையையும் உயர்த்தியது.

கடந்த ஆண்டு இந்த விழாவின்போது 500க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் லேயிலிருந்து கன்னியாகுமரி வரையும் கோஹிமாவிலிருந்து கட்ச் வரையும் ஒன்று திரண்டு வந்தவர்கள், சிறுதானியங்கள், அரிசி, பருப்பு வகைகள், வாசனை திரவியங்கள், அலங்காரப் பொருட்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், ஊறுகாய்கள், ஆர்கானிக் ஐஸ்க்ரீம், எண்ணெய் வகைகள், தேன், தேயிலை, கூந்தலுக்கானைவை, குளியலுக்கானவை, அழகுசாதனப் பொருட்கள், சூரிய சக்தி பொருட்கள், சமையலறை உரங்கள், ஆர்கானிக் பருத்தி ஆடைகள், லினன், ஆர்கானிக் விதைகள், மற்றும் பிற உயிரி உற்பத்திப் பொருட்கள் போன்ற இயற்கை முறையிலான உற்பத்திப் பொருட்களுடன் வந்தனர். தில்லியில் கடந்த ஆண்டு விழாவின் வெற்றியைக் கண்ட அமைச்சகம் இந்த ஆண்டு விழா நடக்கும் காலத்தை 10 நாட்களிலிருந்து 15 நாட்களாக அதிகரித்துள்ளது.

*****



(Release ID: 1506188) Visitor Counter : 129


Read this release in: English