சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலை துறை அக்டோபர் 2 லிருந்து 6 வரை தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி 50 கண் பரிசோதனை முகாம்களை நடத்தவுள்ளது. அப்போது ட்ரக் ஒட்டுநர்கள், தூய்மையாளர்கள், உதவியாளர்களுக்கு கண் கண்ணாடிகள் விநியோகிக்கப்படும்
Posted On:
01 OCT 2017 5:33PM by PIB Chennai
மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் பஞ்சாரி சுங்கச் சாவடி – நாக்பூர் புறவழிச் சாலையில் 2017, அக்டோபர் 2ல் ட்ரக் ஓட்டுநர்கள், தூய்மையாளர்கள், உதவியாளர்களுக்குக் கண் கண்ணாடி வழங்குதல் மற்றும் நாடு முழுவதும் கட்டணமின்றி கண் பரிசோதனை முகாமை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றம் நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை தூய்மைத்திட்ட அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கிவைக்கவிருக்கிறார். தொடர்ச்சியாக அதிகபட்சம் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் ட்ரக் ஓட்டுநர்களுக்குத் துல்லியமான பார்வையையும் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்வது இந்த முன் முயற்சி திட்டத்தின் நோக்கமாகும்.
பாதுகாப்பான வாகன ஒட்டுநருக்குக் கண்பார்வை அடிப்படை தேவையாகும். மங்கலான பார்வை வாகனங்கள் மோதும் ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால் 2017 அக்டோபர் 2 அன்று கட்டணமின்றி கண்பரிசோதனை முகாமைத் தொடங்கி ட்ரக் ஒட்டுநர்கள், தூய்மையாளர்கள், உதவியாளர்களுக்குக் கண்கண்ணாடி வழங்குவதைத் தொடங்க என்எச்ஏஐ முடிவு செய்துள்ளது. இது மேலும் 5 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 6 வரை தொடரும். தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய என்எச்ஏஐ மேற்கொள்ளும் பல பதிய செயல் திட்டங்களில் ஒட்டுநர்களுக்குக் கட்டணமின்றி கண்பரிசோதனை முகாம்கள் நடத்துவதும் ஒன்றாகும். இந்த முன்முயற்சி ட்ரக்குகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதோடு இந்தகை முகாம்களைத் தொடர்ச்சியாக நடத்த பிராந்திய ஊழியர்களையும் தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்லத்தக்க ஒட்டுநர் உரிமத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த வசதி தூய்மையாளர்களுக்கும் கிடைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட 50 இடங்களில் இருபக்கங்களிலும் கட்டணமின்றி கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் சிறப்பு கண் மருத்துவர்களும் தன்னார்வ உதவி ஊழியர்களும் அமர்த்தப்படுவார்கள். கழிப்பறைகள், அருந்து பொருள் விற்பனை எந்திரங்கள், சுமார் 50 ட்ரக்குகள் நிறுத்துவதற்குப் போதுமான இடவசதி, கைகழுவும் இடம் போன்று இன்னபிற வசதிகள் இந்த முகாம்களில் செய்யப்பட்டிருக்கும். இந்த முகாம்களில் மேலும் ஒரு பகுதியாக கட்டணமின்றி கண்கண்ணாடிகள் வழங்குவதாக இருக்கும். இவை சிறப்பு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட பார்வைத்திறன் கொண்டதாக இருக்கும் கண்புரை போன்ற மற்ற கோளாறுகளும் கண்டறியப்படும். மருந்துகள் பரிந்துரைக்கப்படும். அரசு சாரா அமைப்புகள், அரசுகள், சமூக நிறுவனங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் ஆகியவை இந்த வசதிகளைச் செய்துதர ஈடுபடுத்தப்படும்.
****
(Release ID: 1506187)
Visitor Counter : 135