நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி விஷயத்தில் வரிவிகிதங்களைக் குறைக்க நாம் வருவாயைக் கூடுதலாக ஈட்ட வேண்டும் என்று கூறிய நிதியமைச்சர், ஐஆர்எஸ் (சி மற்றும் சிஇ) ன் 67 வது பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பைப் பார்வையிட்டு நிறைவுரையாற்றினார்; வரி தொடர்பான சட்டங்களை நியாயமாக அமல் செய்யக் கேட்டுக் கொண்டார்; அதன் அமைப்பு தினத்தில் என்ஏசிஐஎன் கையேட்டையும் ஆண்டுவிவர நூலையும் வெளியிட்டார்

Posted On: 01 OCT 2017 5:34PM by PIB Chennai

ஜிஎஸ்டியைப் பொறுத்தவைரை வருவாய் ஈட்டுதல் அதிகரித்தால் அதன் பயனாக முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குறைந்த வரி விகிதங்கள் போன்ற பெரிய சீர்திருத்தங்கள் பற்றி நாம் சிந்திக்கலாம். ஆனால் அதற்கு நாம் கூடுதல் வருவாய் ஈட்டுபவர்கள் ஆகவேண்டும் என்று மத்திய நிதி மற்றம் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி தெரிவித்தார். இதனை உறுதி செய்ய நாம் பெருமளவு செயல் திறனை உத்தரவாதப்படுத்துவது அவசியம் என்றும் நிதியமைச்சர் கூறினார். வரி தொடர்பான சட்டங்களை அமலாக்குவதில் மந்த நிலை இருக்கக்  கூடாது என்றார் அவர். ஏதாவது சந்தேகம் இருந்தால் நேரடியாக அணுகுங்கள் என்று இளம் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபதில் உள்ள நாசினில் ஐஆர்எஸ் (சி மற்றம் சிஇ) யின் 67 வது பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மற்றும் நாசின் (என்ஏசிஐஎன்) அமைப்பு தின நிகழ்ச்சியில் இன்று நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி நிறைவுரையாற்றினார்.

அதிகாரிகள் தங்கள் பணியின்  தொடக்க நிலையிலிருந்தே கவுரவத்தோடும், சுயமரியாதையோடும், பெருந்தன்மையோடும் பணியாற்றும் பாதையைத் தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். ஒரு அதிகாரியின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு உடனிருப்பவர்களே சரியானவர்கள் என்று அமைச்சர் உரையை நிறைவு செய்தார்.

சுங்கம், மறைமுகவரிகள் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான தேசிய கல்விக் கழகத்தின் (என்ஏசிஐஎன்) நிறுவன தினம் இன்று அதாவது ஞாயிறன்று, 1 அக்டோபர், ஃபரிதாபாதிலுள்ள நாசின் வளாகத்தில் முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. இது ஒரு பயிற்சிப்பள்ளியாக 1955-ல் அக்டோபர் 1 அன்று தொடங்கப்பட்டது. நிறுவன தின விழாவுக்கு மத்திய நிதிஅமைச்சர் திரு அருண்ஜேட்லி தலைமை தாங்கினார்.

நிறுவன தின விழாவின்போது, 2015 ஆம் ஆண்டில் பயிற்சி முடித்த ஐஆர்எஸ் (சி மற்றும் சிஇ) பிரிவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. நிதி அமைச்சர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நாசின் சார்பாக திரு. ஜேட்லியை சிபிஇசி தலைவர் திருமதி வனஜா என். சர்னா வரவேற்றார்.

இந்தக் கல்விக் கழகத்தில் தங்கள் பணிக்கான பயிற்சியை நிறைவு செய்து அணிவகுப்பில் பங்கேற்ற இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ், சி மற்றும் சிஇ) 2015 வது ஆண்டுப்பிரிவில் 32 பெண் அதிகாரிகள் உட்பட 147 அதிகாரிப் பயிற்சியாளர்கள் இருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜிஎஸ்டியை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த இளம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளிலான பயிற்சியின் போது சிறப்புமிக்க சாதனை புரிந்த ஐந்து அதிகாரி பயிற்சியாளர்களுக்கு இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது நிதிஅமைச்சர் திரு அருண்ஜேட்லி பதக்கங்களை வழங்கினார். ஒட்டு மொத்தத்தில் சிறந்த பயிற்சி அதிகாரிக்கான நிதி அமைச்சரின் தங்கப்பதக்கம் இளம் அதிகாரி டாக்டர் ஃபரசச்சாரியாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது நாசின் கையேடு மற்றும் ஆண்டு விவர நூலினையும் நிதி அமைச்சர் திரு ஜேட்லி வெளியிட்டார். கல்விக்கழகத்தின் வரலாறு மற்றும் இந்திய வருவாய் சேவை பற்றிய விவரங்களைக் கையேடு பதிவு செய்கிறது. பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலில் சிறப்புமிக்கப் பங்களிப்பு செய்ததற்காக நாசினின் நான்கு ஆசிரியர்களுக்கும் நிதி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சர்வதேச அளவில் நாசினின் திறன் வளர்ப்புப் பங்குதாரர்களான டபிள்யுசிஓ, யுஎன்இபி, யுஎன்ஓடிசி, ஏடிசி மற்றும் பிறரையும் கூட இந்த நிகழ்ச்சியின் போது நிதி அமைச்சர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஜிஎஸ்டி நீட்சி மற்றும் பயிற்சிக்கு நாசினின் பங்களிப்பு பற்றிய அரங்கையும் நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார். இந்தக் கல்விக் கழகத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி விளக்கும்  ”நாசின் பாரம்பரியப் பயணம்” எனப் பொருத்தமான பெயரிடப்பட்ட கண்காட்சியை தலைமை விருந்தினரும் மற்ற பிரமுகர்களும் பார்வையிட்டனர்.

இந்த விழாவில் பங்கேற்றவர்களில் மத்திய சுங்க வரி மற்றும் மத்திய கலால் வாரியத்தின் (சிபிஇசி) மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

****


(Release ID: 1506186) Visitor Counter : 135


Read this release in: English