வெளியுறவுத்துறை அமைச்சகம்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்கும் கீதாவின் பெற்றோர்களைக் கண்டறிய மக்கள் தங்கள் உதவியை வழங்க வெறியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள்.

Posted On: 01 OCT 2017 8:53PM by PIB Chennai

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்கும் செவித்திறன் குறைபாடுள்ள பேச இயலாத கீதா என்ற பெண்ணின் பெற்றோர்களைக் கண்டறிய மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் இன்று தமது வேண்டுகோளினை விடுத்த திருமதி சுஷ்மா சுவராஜ், கீதாவின் பெற்றோர்களைக் கண்டறிய உதவி செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றார். பொது மக்கள் , குறிப்பாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தோர் கீதா என்கிற குட்டி (Guddi) பற்றிய தகவலை அளிக்க முன்வரவேண்டும் என்று டிவிட்டர் @ ஏஎன்ஐ, @ டிடி நியூஸ் லைவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள ஏஎன்ஐ பதிவு செய்த வீடியோவில் அவர் தெரிவித்திருக்கிறார். பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் திங்களின் பெண் குழந்தையைத் தவறவிட்ட யாரையாவது அவர்களுக்குத் தெரியுமென்றால் அவர்கள் கீதாவின் பெற்றோர்களாக இருக்கக் கூடும் என்றும் கூறியிருக்கிறார்.

கீதா வெளிப்படுத்தும் சைகை மொழியின் மூலம் அவர் பீகார் அல்லது ஜார்கண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கீதா இருந்த போது அவரை கவனித்துக்கொள்ள ஆதரவாக இருந்த எதி அறக்கட்டளைக்கும் வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் தமது செய்தியில் நன்றி கூறியுள்ளார்.

கீதா அவரது பெற்றோர்களை விரைவில் சந்திக்க ஏதுவாக ஊடகங்களும் மக்களும் இந்தச் செய்தியை அதிகபட்ச மக்களுக்குப் பரவச் செய்ய வேண்டும் என்றும் திருமதி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

*****



(Release ID: 1506185) Visitor Counter : 122


Read this release in: English