குடியரசுத் தலைவர் செயலகம்
                
                
                
                
                
                
                    
                    
                        காந்திஜெயந்தி விழாவையொட்டி குடியரசுத்தலைவரின் செய்தி
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                01 OCT 2017 5:25PM by PIB Chennai
                
                
                
                
                
                
                காந்திஜெயந்தி விழாவையொட்டி குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தி.
”தேசப்பிதா மகாம்மா காந்தியின் சிந்தனைகளுக்கும் மாண்புகளுக்கும் நம்மை நாமே மறு அர்ப்பணம் செய்து கொள்ள நம் அனைவருக்குமான தருணம் காந்தி ஜெயந்தி ஆகும்”
எளிமையாக வாழ்ந்த ஒரு மனிதரும், நீதி ஆசானுமான காந்திஜி தமது தலைமைத் துவத்தின் மூலம் நாட்டுக்குப் புதிய வழியைக் காட்டியவர். அவரது தத்துவமான அகிம்சையும் சமாதான சகவாழ்வும் தற்போதைய காலத்தில் கூடுதல் பொருத்தம் உடையதாக இருக்கிறது. நூல்நூற்கும் சக்கரத்தையும் காதியையும் அடையாளங்களாகக் கொண்டு தற்சார்பு மற்றும் உழைப்பின் பெருமையை அவர் வலியுறுத்தினார்”
தூய்மை செய்வது என்பது அரசுத் துறைகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பொறுப்பு மட்டும் அல்ல. ”தூய்மையே சேவை” என்ற இயக்கத்தின் மூலம் தூய்மைக்கும் நலம் பேணுதலுக்கும் தீர்மானகரமான ஒரு போராட்டத்தை இந்தியா இன்று நடத்தி வருகிறது. ’தெய்வீகத்திற்கு அடுத்தது தூய்மை’ என்பதை காந்திஜி நம்பினார். தூயமனம், தூய உடல், தூய்மையான சுற்றுப்புறம் என்ற முப்பரிமாணமாக அவர் தூய்மையைக் காட்சிப்படுத்திப் பார்த்தார். பொது இடத்தூய்மை, தன்னளவில் தூய்மைச் சுற்றுப்புறத் தூய்மை என்பதை உத்தரவாதப்படுத்த நாம் உறுதிபூண வேண்டும்.
இது பல்வகை பங்கேற்பாளர்களின் தேசிய இயக்கமாகும். தூய்மை பாரத இயக்கம் என்ற இலக்கினை வெகு விரைவாக எட்டுவதுதான் காந்திஜியின் பிறந்த ஆண்டில் அவரது புகழையும் பெருமையையும் உண்மையாக வெளிப்படுத்துவதாகும். 
                
                
                
                
                
                (Release ID: 1506184)
                Visitor Counter : 162