குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் இன்று மகாராஷ்ராவில் இருக்கிறார். ’திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகர்ப்புற மகாராஷ்ட்ரா’ என அறிவித்தல், ஷிர்டி விமான நிலையத் திறப்பு சாய்பாபா சமாதி நிலை அடைந்த தன் நூற்றாண்டுவிழா ஆகிய சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

Posted On: 01 OCT 2017 5:26PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மும்பையில் இன்று (அக்டோபர் 01, 2017) திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத (ஓடிஎஃப்) நகர்ப்புற மகாராஷ்ட்ரா என அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

     இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், தூய்மை இந்தியா என்ற அடித்தளத்தின் மீதுதான் ஆரோக்கியமான வளமாக இந்தியாவைக் கட்டமைக்க முடியும். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகர்ப்புற மகாராஷ்ட்ரா என அறிவிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுக்காக மகாராஷ்ட்ரா அரசுக்கும் முதலமைச்சருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். ”தூய்மை மகாராஷ்ட்ரா குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த இலக்கை அடைவதற்குப் கடுமையாக உழைத்த அனைவருக்கும் அக்டோபர் 2, 2015 அன்று, இரண்டாண்டு காலவரம்பு நிர்ணயித்து செயல் பட்டதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

     மகாராஷ்ட்ரா மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் நகர்ப்பகுதிகளில் வாழ்வதால் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகர்ப்புற மகாராஷ்ட்ரா என் அறிவிப்பது மிகவும் பொருத்தமானது என்றும் குடியரசுத்தலைவர் கூறினார். ’நவீன நகரங்களுக்கு’ ’நவீன சுகாதாரமும்’ ’நவீன கழிவு மேலாண்மையும்தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். வெற்றிகரமான இந்த இயக்கத்தை நீடித்துக் கொண்டு செல்வதில் அரசு கவனம் செலுத்தியது மிகவும் திருப்தி அளிக்கும் விஷயம் என்று குடியரசுத்தலைவர் மேலும் கூறினார். மக்களை உஷார்ப்படுத்தவும் பழைய பழக்கங்களிலிருந்து அவர்கள் வெளியேறவும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திற்கு மீண்டும் ஆட்படாமைக்கும்ஓடி வாட்ச்எனும் கண்காணிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ’ஓடிஎஃப்என்ற இலக்கை எட்டுவதில் வெற்றி பெற்றுள்ள மாநில அரசு “100 சதவீதக் கழிவு நிர்வாகம் என்ற இலக்கிலும் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாளைய தினம் காந்தி ஜெயந்தி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகர்ப்புற மகாராஷ்ட்ரா என்று இன்று அறிவித்திருப்பது காந்திஜிக்கு மகாராஷ்ட்ரா வழங்கியிருக்கும் பொருத்தமான புகழாரம் ஆகும்.

     முன்னதாக, ஷிர்டி சர்வதேச விமான நிலையத்தைத் திறந்துவைத்த குடியரசுத்தலைவர், ஷிர்டியிலிருந்து மும்பை செல்லும் முதலாவது விமானத்தையும் கொடியசைத்து அனுப்பிவைத்தார். ஷிர்டியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதியின் நூற்றாண்டு விழாவையும் அவர் துவக்கி வைத்தார்.

     ஷிர்டியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் நமது நாட்டில் ஒவ்வொரு சாதி, மதம், பிரிவு, வகுப்பிலிருந்தும் மக்களைக் கவர்ந்துள்ளார் சாய்பாபா என்றார். ’சப்கா மாலிக் ஏக் ஹேபோன்ற எளிய தொடர்களைப் பயன்படுத்தி சாமான்ய மக்களுக்கும் அத்வைத தத்துவத்தை சாய்பாபா விளக்கினார். சாய்பாபாவின் செல்வாக்கை உலகம் முழுவதும் காண முடியம்.

     ’ஆன்மீகத் தொடர்புகளோடுபரந்த அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் மூலம்நிலவியல் தொடர்பும்தேவைப்படுகிறது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். விமான நிலையம் கட்டப்பட்டுள்ள நடவடிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், இது யாத்ரிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உதவும் அதே சமயத்தில் பொருளாதார செயல்பாட்டை அதிகரிக்கும் ஷிர்ரியில் வேலை வாய்ப்பும் உருவாகும் என்றார். இன்று திறக்கப்பட்ட ஷிர்டி சர்வதேச விமான நிலையத்தைப் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

*****



(Release ID: 1506183) Visitor Counter : 132


Read this release in: English