ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே பாதுகாப்புக்கான உயர்நிலைக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
மத்திய ரயில்வே அமைச்சரால் ரயில் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
Posted On:
30 SEP 2017 10:14AM by PIB Chennai
மும்பை புறநகர் ரயில்வே அதேபோல் ஒட்டுமொத்த இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக ஆய்வு செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் ரயில்வே பாதுகாப்புக்கான உயர்நிலைக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் சர்ச்கேட் பகுதியில் உள்ள (மேற்கு ரயில்வே) டபிள்யூஆர் தலைமையகத்தில் 2017, செப்டம்பர் 30 அன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் பயணியர் பாதுகாப்பு உயர் முன்னுரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி, பயணியர் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில இங்கே தரப்பட்டுள்ளன.
- நடைமேம்பாலங்கள் (எஃப் ஓபிக்கள்) நடை மேடைகள், நடை மேடையின் கடைகோடியில் இருக்கும் பாதைகள் ஆகியவற்றை பட்ஜெட் கட்டுபாடு இல்லாமல் பாதுகாப்பில் உயர் முன்னுரிமை உள்ளவையாகக் கருதப்பட வேண்டும். ஏற்கனவே எஃப்ஓபி மட்டும் ரயில் நிலையத்தில் அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது மற்றவை பயணிகள் வசதிக்கானவை என்று கொள்ளப்பட்டது.
- பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அடுத்த 18 மாதங்களுக்கு ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் நிதி அனுமதிக்கு ஒரு வாரத்திற்குள் நிதி ஆணையருக்குத் (எஃசி) தகவல் தெரிவிக்க வேண்டும். எஃப்சி அதனை 15 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை உடன்பாடு இல்லாவிட்டால் அந்த விஷயம் இறுதிமுடிவுக்காக அதேபோல் 15 நாட்களுக்குள் ரயில்வே வாரியத்தின் முன் வைக்கப்பட வேண்டும்.
- அதிக எண்ணிக்கையில் பயணிகள் செல்லும் மும்பை புறநகர் ரயில் நிலையங்கள் கூடுதல் நகரும் படிக்கட்டுகள் அனுமதிக்கான விவரங்கள் 15 நாட்களுக்குள் இறுதிசெய்யப்படும். இதேபோன்ற நடவடிக்கை அகில இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும்.
- களப்பணிகளை வலுப்படுத்தவும், திட்டங்களை அமலாக்கவும் தலைமையகத்திலிருந்து 200 அலுவலர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
- மதிநுட்பமுள்ள பணியார்வம் கொண்ட நிலைய இயக்குநர்கள் பணிகளில் வேகத்தைக் கொண்டுவர இந்தியா முழுவதும் 75 நிலையங்களில் நியமிக்கப்படுவார்கள்.
- மும்பையில் உள்ள அனைத்துப் புறநகர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு நடைமுறையோடு சிசிடிவி கேமராக்கள் அடுத்த 15 மாதங்களுக்குள் பொருத்தப்படும்.
- சிவப்புநாடா முறையைக் குறைத்து பணியைத் துரிதப்படுத்தவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் 2017 அக்டோபருக்குள் களப்பிரிவுகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அளிக்கப்படும்
இந்த நடவடிக்கைகள் ரயில்வேயின் பாதுகாப்புத்தரம் மேம்படுவதை உறுதி செய்யவும் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படவும் வழிவகுக்கும்.
ரயில்வே வாரியத் தலைவர் திரு. அஷ்வனிலஹானி ரயில்வே வாரியத்தின் அனைத்து உறுப்பினர்கள், மேற்கு ரயில்வே பொது மேலாளர் திரு. ஏ.கே. குப்தா, மத்திய ரயில்வே பொது மேலாளர் திரு. டி.கே.ஷர்மா, மாநில அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
******
(Release ID: 1506181)
Visitor Counter : 134