உள்துறை அமைச்சகம்
எஸ்எஸ்பி டிஜியாக திரு. ஆர். கே. மிஸ்ரா பொறுப்பேற்பு
Posted On:
30 SEP 2017 10:12AM by PIB Chennai
திருமதி. அர்ச்சனா ராமசுந்தரத்தையடுத்து சஹஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) தலைமை இயக்குநராக திரு ரஜ்னிகாந்த் மிஸ்ரா இன்று (செப்.30) பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 1984 பிரிவைச் சேர்ந்த உ.பி. காவல் அதிகாரியாவார். அவர் முதுநிலை அறிவியல் பட்டதாரி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர் பல நிலைகளில் பணியாற்றியுள்ளார்.
திரு. மிஸ்ரா 2002 –ம் ஆண்டில் சிபிஐ –ல் சேர்ந்தார். அதில் 2009 வரை டிஐஜி யாகவும் ஐஜியாகவும் பணியாற்றினார். 2013, ஜூன் மாதத்தில் அவர் எல்லைப்பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) சேர்ந்தார். திரிபுரா மற்றும் தெற்கு வங்க எல்லைப் பகுதி தலைமையகத்தில் பிஎஸ்எஃப், ஐஜி / ஏடிஜி யாகப் பணிபுரிந்தார். எஸ்எஸ்பி, டிஜியாகப் பொறுப்பேற்பதற்கு முன் அவர் பிஎஸ்எஃப் தலைமையகத்தில் ஏடிஜியாகப் பணியாற்றி வந்தார்.
2003 –ல் காவல் துறை பதக்கத்தையும் 2009 –ல் கவுரவம் மிக்கக் குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கத்தையும் திரு. ஆர்.கே. மிஸ்ரா பெற்றுள்ளார்.
******
(Release ID: 1506178)