நிதி அமைச்சகம்

கூடுதலான ஏற்றுமதியாளர்களுக்குப் பொறுப்பேற்புக் கடிதம் வழங்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

प्रविष्टि तिथि: 30 SEP 2017 4:05PM by PIB Chennai

வங்கி உத்தரவாதத்திற்கு பத்திரம் வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து சிறு ஏற்றுமதியாளர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். ஜிஎஸ்டியின் கீழ் ஏற்று மதியை ஊக்குவிப்பதற்காக சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டுக்கும் ஏற்றுமதியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வங்கி உத்தரவாதம் தேவையில்லை. பத்திரத்திற்கு பதிலாகப் பொறுப்பேற்புக் கடிதம் அளிக்கும் வசதியை செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பொருத்தமான அறிவிக்கை உரிய நேரத்தில் வெளியிடப்படும். இந்த நடவடிக்கை மூலம் ரொக்கப்பணம் தேங்கும் பிரச்சனைக்குப் பகுதி அளவு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் பல நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

*****


(रिलीज़ आईडी: 1506177) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English