வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மலேசியாவின் செலாங்கர் மாநில தூதுக்குழுவினர் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் சுசேஷ் பிரபுவை சந்தித்தனர்.
Posted On:
30 SEP 2017 9:59AM by PIB Chennai
மலேசியாவின் செலாங்கர் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் பின் அலி, செலாங்கர் முதலீட்டு இயக்கத்தின் 10 உறுப்பினர் குழுவுடன் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபுவை செப்டம்பர் 29 அன்று புதுதில்லியில் சந்தித்தார்.
தொழில், வர்த்தகத்துறை அமைச்சருடனான சந்திப்புக்குமுன், முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கும் செலாங்கர் முதலமைச்சர் பயணம் செய்தார்.
திரு பிரபுவுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், ஹைதராபாதின் ஜெயரோம் பள்ளத்தாக்கில் உள்ளோரின் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தைப் பாராட்டினார். உயிரி தொழில்நுட்பம், ஐசிடி, வாழ்க்கை அறிவியல், போக்குவரத்து மற்றும் சரக்குகள் கையாளுதல் துறையில் இந்தியாவுடன் கூட்டாக செயல்படுத்துவதற்கான மாநிலத்தில் ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார். உயிரி தொழில்நுட்பம், வேளாண்துறை, நோய்கட்டுப்பாடு மற்றும் பிற ஆய்வுத் துறைகள் போன்று புதிய, வளர்ந்துவரும் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு இந்தியாவின் ஆர்வத்தை தொழில், வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.
பிராந்திய நவீன நகரங்கள் மேம்பாட்டுக்கு இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் பணி திறன் தொகுப்பை உதவிடுமாறு செலாங்கரின் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுவாய்ப்புகளைக் கண்டறிய இருதரப்பினரும் ஆர்வம் காட்டினார். இந்தியாவில் உற்பத்தி, திறன்மிகு இந்தியா இந்தியாவில் முதலீடு போன்ற இந்தியாவின் சிறப்பு திட்டங்களில் முதலீடு செய்து மலேசிய நிருவனங்கள் பயன்பெற வேண்டும் என்று திரு பிரபு வலியுறுத்தினார்.
*****
(Release ID: 1506169)
Visitor Counter : 135