அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய-சர்வதேச அறிவியல் விழாவில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்களின் துவக்கவுரை

Posted On: 13 OCT 2017 8:12PM by PIB Chennai
Press Release photo

ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு அப்துல் லத்தீப் ரோஷன் அவர்களே,

வங்கதேச அறிவியல்-தொழில்நுட்ப அமைச்சர் மாண்புமிகு யேஃபேஷ் ஸ்மான் அவர்களே,

எனது சகாவான அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் புவியியல் துறைகளின் இணை அமைச்சரான மாண்புமிகு ஒய்.எஸ். சவுத்ரி அவர்களே,

இந்திய அரசின் செயலாளர்களே,

மதிப்புமிகு விஞ்ஞானிகளே, தொழில்நுட்ப அறிஞர்களே,

பத்திரிக்கைத் துறை நண்பர்களே,

சகோதர, சகோதரிகளே,

 

இந்திய அரசின் சார்பில் உங்கள் அனைவரையும் கனிவோடு வரவேற்கிறேன். இந்த இந்திய-சர்வதேச அறிவியல் விழாவிலும், அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்திலும் பங்கேற்று நம்மை பெருமைப்பட செய்திருக்கும் ஆஃப்கானிஸ்தான், வங்க தேச நாடுகளின் மாண்புமிகு அமைச்சர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வருகை அறிவியல் என்பது அனைவருக்குமானது; நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது   என்ற நமது பொதுவான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்திய நாடு ஆஃப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளுடன் பொதுவான கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளும் நாடாகும். இந்த இரு நாடுகளுமே இந்தியாவுடன் இடையறாத உறவைப் பேணி வரும் நாடுகளும் ஆகும். பரஸ்பர நம்பிக்கை, நட்பு ஆகியவற்றால் பிணைந்துள்ள நமது உயிர்த்துடிப்புள்ள உறவின் பல்வேறு அம்சங்களையும் நமது நாடுகள் போற்றி வரும் அதே வேளையில் 21ஆம் நூற்றாண்டின் அறிவுப் பொருளாதாரத்தில் நமது ஒத்துழைப்பின் முக்கியமான தூணாக அறிவியல்-தொழில்நுட்பத்தின் மென்மையான திறனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அறிவியல்-தொழில்நுட்பம் என்பது மிகவும் இன்றியமையாதவை என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இன்று உலகத்தில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் தங்களது அறிவியல் அறிவு, தொழில்நுட்ப செய்நுட்ப அறிவு ஆகியவற்றால்தான் முன்னேறியுள்ளன என்பதையும் நாம் அனைவருமே நன்கறிவோம்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான இன்றைய அரசு அறிவியல்-தொழில்நுட்பத்தை தனது அறிவு வலிமையின் அடித்தளம் என்று இந்த நாடு நம்பியுள்ளதைப் போலவே, தொழில் நிறுவனங்களும்  தங்களது வெற்றிக்கான காரணமாகவும், மக்கள் சிறந்த வாழ்க்கைக்காகவும் நம்பியுள்ளனர் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுஎனவே சாதாரண மனிதனுக்கு சேவை செய்கின்ற, சமத்துவத்தை வளர்க்கின்ற, நாட்டின் நீடித்த மேம்பாட்டை வளர்த்தெடுக்கின்றமனிதத்தன்மையோடு கூடிய அறிவியல்என்பதை வளர்த்தெடுப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

சமூகத்தின் இதுவரை நிறைவேற்றப்படாத தேவைகளை நிறைவேற்றவும், நாம் அனைவரும் எதிர்கொண்டுவரும் உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் உரிய கருவியாக அறிவியல்-தொழில்நுட்பம் இருக்கும் என்பதை இந்தியா அங்கீகரிக்கிறதுஎனவே உள்ளடக்கிய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற வகையில் நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறத்திற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு மேலும்மேலும் அதிகமான அளவில் அறிவியல்-தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இங்கிருக்கும் அனைவருக்குமே இது பொதுவான தேவையாகவும் உந்துதலாகவும் உள்ளது.

இந்தியாவின் அறிவியல் உலக அளவில் போட்டித்திறன் பெற்றதாக இருக்க வேண்டுமெனில், சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை அது பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, எமது அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் புவியியல் துறைகள் உலகம் முழுவதிலும் உள்ள 44 நாடுகளுடன் தீவிரமாக ஒத்துழைத்து வருகின்றன. அறிவியல்-தொழில்நுட்பத்தில் இன்று ஒத்துழைப்பு என்பது பரஸ்பர நம்பிக்கைஆராய்ச்சி கூட்டணிகளில்உயர்தரம்மற்றும்அதிக தாக்கம்ஆகியவற்றை கூட்டாக அடைவதையே நோக்கமாகக்  கொண்டதாகும். இந்த ஒத்துழைப்பு கல்வித் துறையிலான ஆராய்ச்சிக் களத்திலும் கொள்திறனை வளர்த்தெடுப்பதிலும் விரிவடைந்துள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான பாதையாக அடிப்படை ஆய்விற்கான சுற்றுச் சூழலை ஏற்படுத்த நமது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை சிறந்த செயல்முறைகள் பற்றி உணர்ந்து கொள்ளவும், அவற்றை இங்கு அமல்படுத்தவும் மேலும் மேலும் அதிகமான அளவில் உலகத்துடன் தொடர்புடையதாக இருக்கவேண்டியுள்ளது. நமது கூட்டான கல்வி, அனுபவங்கள் ஆகியவற்றின் மூலமே பள்ளங்களைத் தவிர்த்து நாம் தாவிக் குதிக்க முடியும்.

முக்கியமாக, தொழில்நுட்ப கருவிகள், கண்டுபிடிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சமூகத்தின் பிரம்மாண்டமான சவால்களை நமது  சர்வதேச , இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முயற்சிகளின் மூலம் கூட்டாக எதிர்கொள்ள இப்போது துவங்கியுள்ளது. இன்று நமது விஞ்ஞானிகள் விரிவான அளவில் அடிப்படை  அறிவியலிலிருந்து துவங்கி மாபெரும் அறிவியல் திட்டங்கள் வரை சர்வதேச அளவில் ஒத்துழைத்து வருகின்றனர்ஜிகா, காசநோய், மலேரியா, டெங்கு போன்றவற்றுக்கான புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கவும், தூய்மையான எரிசக்தி, பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான புதிய அறிவுபூர்வமான பொருட்களைக் கொண்ட தீர்வுகளை உருவாக்கவும், பயிர் உற்பத்தியை மேம்படுத்தவும், பருவமழை குறித்த முன்னறிதல் உள்ளிட்டு நீர் சுழற்சி, பருவநிலை முன்னறிவிப்பு, பேரழிவு குறித்த முன்னறிவிப்பு மற்றும் அதன் மேலாண்மை ஆகியவை குறித்து பயின்று வருகின்றனர். நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு சக்தியை சமாளிக்கவும், புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிக்காகவும், உணவுப் பாதுகாப்பிற்கான விவசாயம் ஆகியவை குறித்த புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்  ஆகியவையும் கூட வளர்ச்சியடைந்த, வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே,

ஆய்வுத்திறன், தனித்திறன் ஆகியவற்றை வளர்த்தெடுக்க நமது நாடுகளில் உள்ள மிகச்சிறந்தவர்களை கண்டறிந்து, கவர்ந்திழுத்து, வாய்ப்புகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் நாம் அங்கீகரிக்கிறோம். வேலை என்ற வகையில் அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்வதற்கு நமது இளைஞர்களுக்கு நாம் மேலும் அதிகமான ஊக்கத்தை அளிக்கவேண்டும். இது நம் அனைவருக்கும் முன்னால் உள்ள சவால் மட்டுமல்ல; நம் உலகம் சந்தித்து வரும் பிரச்சனையாகவும் அது உள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் நம் முன்பாக மேலும் பெரிய சவால் உள்ளது. இந்த துடிப்பான, இளமையான, செறிவான மூளையுள்ளவர்களை வழங்குபவர்களாக, அதற்கான  ஆதாரமாகவும் உலகம் நம்மை பார்க்கிறது.

அறிவியலுக்காக சிறந்தவர்களை கவர்ந்திழுக்க வேண்டும்என்பதில் நாம் கவனம் செலுத்தும் அதே நேரத்தில்அறிவியல் என்பது நமது மக்களின் நலனுக்கானதுஎன்பதையும் உள்ளடக்கியதாக நமது ஒத்துழைப்பு அமைந்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்ஆராய்ச்சி மையத்தை மக்களிடம், சமூகத்திடம், சந்தையிடம் எடுத்துச் செல்வதன் மூலம் கண்டுபிடிப்பு அறிவியலை தீர்வுக்கான அறிவியலாக நாம் தொடர்பு படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. இதுதான் இப்போதைய தேவை ஆகும்.

இன்று அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியானது கண்டுபிடிப்போடும் வர்த்தகத்தோடும் தொடர்புடையதாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உயிர்த்துடிப்பான தலைமையின் கீழ் இந்தியாவின் உள்ளார்ந்த, ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையானது பயன்படக்கூடிய தொழில்நுட்ப மேடைகள், அறிவு ஒன்றிணையும் முறைகள் ஆகியவற்றில் நிலைபெற்றுள்ளன. கண்டுபிடிப்பிற்கான புதிய சூழ்நிலை, தொழில்நுட்ப வழியிலான தொழில்முனைவு ஆகியவைதொடங்கிடு இந்தியாமுன்முயற்சியின் கீழ் தேசந்தழுவிய இயக்கமாக உருப்பெற்றுள்ளதுஉள்ளார்ந்த வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கான  கருவிகளை இவை நமக்கு வழங்கும்.

மாண்புமிகு அமைச்சர்களே, இதன் செயல்பாட்டை சென்னை ஐஐடியின் அறிவியல் பூங்காவிலேயே உங்களால் பார்க்க முடியும். தங்களுக்கேயான நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டதன் மூலம் இங்கே மாணவர்களே தொழில்முனைவர்களாக மாறியுள்ளதை உங்களால் காண முடியும்.

இதேபோன்ற வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொண்டு வரும் நாடுகளுடன் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதில் இந்தியா எப்போதுமே நம்பிக்கை கொண்ட நாடாகும். சாதாரண மனிதனின் நிறைவேறாத தேவைகளை நிறைவேற்ற அறிவியல், தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் இப்போது நமது ஒத்துழைப்பு கவனம் செலுத்தத் துவங்க வேண்டும் என்றே நான் நம்புகிறேன். கடுமையான உழைப்பு, வறுமை ஆகியவற்றிலிருந்து மனிதர்கல் விடுதலை பெறுவதற்கான வழிகளை வழங்கபொருத்தமான தொழில்நுட்பத்தைபயன்படுத்த வேண்டும் என்றே நமது நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் ஆப்ரிக்காவுடன் இத்தகைய திட்டங்களை துவக்குவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த வாரம்தான்அடிமட்டத்தில் கண்டுபிடிப்பு முயற்சிகள்என்ற புதிய திட்டத்தை தென் ஆப்பிரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைச்சருடன் இணைந்து அறிவித்தேன். மதிப்புக் கூட்டலின் மூலமும், சரிபார்த்தலின் மூலம் பொருட்களை கொண்டுவந்து இறக்குவது, சந்தைப்படுத்தலுக்குத் தயாரான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றை கூட்டாக உருவாக்குவதை இத்தகைய திட்டங்கள் நோக்கமாகக் கொண்டவை ஆகும். விவசாய செயல்பாடுகள் உள்ளிட்டு நமது பாரம்பரிய அறிவு குறித்த அறிவுத்திறனுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றை நாம் சிறப்பான வகையில் பகிர்ந்து கொள்ள முடியும். பெருமளவில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, பொருத்தப்பாடுடைய தீர்வுகளை பெறவும், அணுகவும் கூட்டாக வளர்த்தெடுக்க நமக்கு உதவி செய்யும்.

இருதரப்பு நாடுகள் என்ற அளவில் இந்தியா உலகெங்கிலுமுள்ள முன்னேறிய நாடுகள் பலவற்றுடனும் தொழில்துறை மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக துவக்கியுள்ளது.இந்த விழாவின் பகுதியாக அமைந்துள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இவ்வாறு கூட்டாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், பொருட்கள் ஆகியவை பார்வைக்கு வைத்திருப்பதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்நமது பிராந்தியத்தில் நீடித்த வளர்ச்சிக்கான பொதுவான சவால்களை எதிர்கொள்ள அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஈடுபடுத்துவதில் எங்களது அனுபவங்களையும் அறிவையும் எங்களால் நிச்சயமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

சகோதர, சகோதரிகளே,

வங்கதேசம், மியான்மர், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நமது அண்டை நாடுகளைப் பொறுத்தவரையில் தேவையின் அடிப்படையிலான, பொருட்கள் அடிப்படையிலான ஒத்துழைப்பை நாங்கள் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம் என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அறிவியல்-தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ஒத்துழைப்பின் மூலம் இந்த நாடுகளின் தேவைகளை கூட்டாக எதிர்கொள்ளும் கண்ணோட்டத்துடனேயே இது மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக, வியட்நாமுடன் தோல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தோல் பதனிடுதலில் கழிவு மறுசுழற்சி ஏற்பாடு, வங்க தேச உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து படிகவியல் ஆராய்ச்சி, மியன்மருடன் கணினி அறிவியலுக்கான ஆசிரியர்களை உருவாக்குதல், தாய்லாந்துக்கென புவி இயற்பியல் குறித்த தகவல் முறையைப் பயன்படுத்தி நகர்ப்புற திட்டமிடுதல், ஸ்ரீலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான திறன் மேம்பாடு ஆகியவை மிகுந்த கவனத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் பயன்படும் வகையிலான ஒத்துழைப்பு முறையை நிறுவ அறிவியல்-தொழில்நுட்ப வலிமையும் பொருத்தப்பாடும் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.

எனவே, இன்றைய சிறப்புக் கூட்டத்தில் நமது மதிப்பிற்குரிய விருந்தினர்களிடமிருந்து அறிவியல் தொழில்நுட்பத்திற்கான முன்னுரிமைகள் குறித்து தங்கள் நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள நாங்கள் ஆவலாக உள்ளோம்இது ஆராய்ச்சி, கல்வி, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான கூட்டணியை வளர்த்தெடுக்க இருதரப்பு அளவில் இந்தியாவுடன் ஒத்துழைப்பிற்கான பாதையை உருவாக்க  எங்களுக்கு உதவும். அறிவியல்-தொழில்நுட்ப கூட்டணி என்பதன் மூலமே நமது மக்களின் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியும்; மனிதத் திறனை மேம்படுத்த முடியும்; நமது நாட்டின் அறிவுசார் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக் கூடிய சிறப்புத் திறனையும் நம்மால் வளர்த்தெடுக்க முடியும்.

அனைவருக்கும் நன்றி.

வணக்கம்.

 


(Release ID: 1506048) Visitor Counter : 364
Read this release in: English