சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நலமான இந்தியா – வலுவான இந்தியா

Posted On: 13 OCT 2017 4:32PM by PIB Chennai

இந்திரதனுஷ் இயக்கம் (நல்வாழ்வு)

  • 2020ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சமாக 90 சதவீத குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பூசி முறையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
  • உயிருக்கு ஆபத்தான 7 நோய்களுக்கு எதிரான தடுப்பூசி ஏற்பாடு என்பதே முழுமையான தடுப்பூசி முறையாகும். வழக்கமான தடுப்பூசி இயக்கங்களின் போது விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கும் இதை நிறைவேற்றுவதும் இதன் நோக்கமாகும்.
  • இதுவரையில் நெருங்காதவர்களையும் நெருங்குவது என்ற நோக்கத்துடனேயே துவங்கப்பட்ட இந்த இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் 2.1 கோடி குழந்தைகள், சுமார் 56 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
  • 1.8 கோடி ஜிங்க் மாத்திரைகள், நீரற்ற நிலையை சரி செய்ய 52 லட்சம் வாய்வழி உப்புநீர்வழங்கும் பாக்கெட்டுகள் ஆகியவற்றோடு கூடவே சுமார் 60 லட்சம் விட்டமின் ஏ மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • ஒருங்கிணைந்த குழந்தை நலம் மற்றும் தடுப்பூசி ஏற்பாட்டிற்கான ஆய்வின் அறிக்கையின்படி முழு தடுப்பூசி ஏற்பாட்டில் ஆண்டுதோறும் 1 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு ஏற்பட்டு வந்த நிலை மாறி, இந்திரதனுஷ் இயக்கம் ஆண்டுதோறும் 6.7 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • வழக்கமான தடுப்பூசி ஏற்பாடுகள் சென்றடையாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இந்த ஏற்பாடு சென்றடைய வேண்டும் என்பதற்காகவே 2014-15இல் இந்திரதனுஷ் இயக்கம் துவங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேருக்கு முழுமையான தடுப்பூசி ஏற்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே  இந்திரதனுஷ் இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.
  • இந்திரதனுஷ் இயக்கத்தின் மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் 35 மாநிலங்கள்/துணைநிலை மாநிலங்களில் உள்ள 497 மாவட்டங்களில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017 பிப்ரவரி 7ஆம் தேதியிலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 68 மாவட்டங்களில் இதன் 4வது கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களின் மூலம் 35 மாநிலங்கள்/துணைநிலை மாநிலங்களில் உள்ள 505 மாவட்டங்களில் இந்திரதனுஷ் இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. 2017 ஏப்ரல் 7 முதல் மற்ற 18 மாநிலங்களில் உள்ள 182 மாவட்டங்களில் இந்திரதனுஷ் இயக்கத்தின் அடுத்த கட்டம் செயல்பட்டு வருகிறது.
  • தாய்மார்களுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்படும் இழுப்பு நோயை  2015 டிசம்பருக்குள் முற்றிலுமாக அகற்றுவது என்ற இந்தியாவின் இலக்கு 2015 மே மாதத்திலேயே  நிறைவேற்றப்பட்டுவிட்டது.
  • நிறுவன ரீதியான சேவையை மேம்படுத்துவது, வழக்கமான தடுப்பூசி ஏற்பாடுகளை வலுப்படுத்துவது ஆகிய வழிகளில் மக்கள் அனைவருக்குமான நல்வாழ்வு திட்டம், குழந்தைகள் அனைவருக்குமான நல்வாழ்வு செயல்திட்டம் போன்ற புதுமையான திட்டங்களின் மூலம் நல்வாழ்வுக்கான முறைகளை வலுப்படுத்தியதன் விளைவாக எம் என் டி(?) யை முற்றிலுமாக அகற்றுவதில் நம் நாடு வெற்றி பெற்றுள்ளது.

பிரதமர் கர்ப்பிணிப் பெண்கள் நல்வாழ்வுத் திட்டம்

  • நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதியன்று இலவசமாக உறுதியளிக்கப்பட்ட, முழுமையான, தரமான குழந்தைப் பேறுக்கு முந்தைய கவனிப்பை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அரசு நல்வாழ்வு நிலையங்களில் இரண்டாவது/மூன்றாவது மும்மாதங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்கு முந்தைய குறைந்தபட்ச கவனிப்பை இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது.
  • தனியார் மருத்துவத் துறையையும் இந்த இயக்கத்தில் ஈடுபடுத்துவதில் முறையான அணுகுமுறையை இத்திட்டம் மேற்கொள்கிறது. இந்த பிரச்சாரத்திற்காக தாமாகவே முன்வந்து சேவை செய்ய தனியார் மருத்துவர்களை இது ஊக்கப்படுத்த முனைகிறது. அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கி, அரசு நல்வாழ்வு நிலையங்களில் நடைபெறும் இத்திட்டத்தில்  பங்கேற்குமாறு தனியார் மருத்துவத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
  • இத்திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்/ துணைநிலை மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் முழுமையான சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள அரசு நல்வாழ்வு மையங்களில் பிரசவத்திற்கு முந்தைய சோதனைகள் 40 லட்சம் பேருக்கும் மேல் நடத்தப்பட்டுள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும்/ துணைநிலை மாநிலங்களிலுமாக11,000க்கும் மேற்பட்ட நல்வாழ்வு நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • அனைத்து மாநிலங்களிலும்/ துணைநிலை மாநிலங்களிலும் இத்திட்டத்திற்கான இணைய தளத்தில் 3,750க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
  • இத்திட்டத்தின் கீழ் 1,400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேவை செய்து வருகின்றனர்.
  • இத்திட்டத்தின்கீழ் 2.7 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக அபாயமான கர்ப்பநிலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆறுமாத தாய்மைப் பேறு விடுப்பு

உழைக்கும் பெண்களுக்கான தாய்மைப் பேற்றுக்கான விடுப்பு காலத்தை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்த தாய்மைப்பேறு வசதிக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

நோய்களை அகற்றுவது (உடல்நலம்)

2017ஆம் ஆண்டிற்குள் கருப்புக்காய்ச்சல் நோய், யானைக்கால் நோய் ஆகியவற்றையும், 2018ஆம் ஆண்டிற்குள் தொழுநோயையும், 2020ஆம் ஆண்டிற்குள் சின்னம்மை நோயையும், 2025ஆம் ஆண்டிற்குள் காச நோயையும் நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்ற 2017-18 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் மலிவான, தரமான மருத்துவ வசதி – விலை மலிவான மருந்துகள் கிடைக்கச் செய்வது

(2017 மார்ச் 31 நிலவரப்படி) 2014 மே மாதத்திற்குப் பிறகு உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டு 963 அத்தியாவசிய மருந்துகள் விலைக்கட்டுப்பாட்டு வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் நுகர்வோர் மொத்தம் ரூ. 7,570 கோடி பயனடைந்தனர்.

இதய நோயாளிகளுக்கு மலிவான, எளிதில் கிடைக்கும் வகையிலான நல்வாழ்வு ஏற்பாடுகள்

இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் ஸ்டென்ட்டுகளின் விலை 85% குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மக்களுக்கான மருந்து விற்பனைத் திட்டம்

  • 2014இல் 99 ஆக இருந்த மக்களுக்கான பிரதமரின் மருந்து விற்பனை மையங்கள் 2017 ஏப்ரல் 27 அன்று மொத்தம் 1224 ஆக உயர்ந்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் அடங்கும் பொருட்களும் கூட விரிவுபடுத்தப்பட்டு தற்போது 600க்கும் மேற்பட்ட மருந்துகள், 154 அறுவைசிகிச்சைக்கான உதவிக் கருவிகள், நுகர்வு பொருட்கள் ஆகிய அனைத்து வகையான சிகிச்சைகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளன.

அமிர்தம் (நல்வாழ்வு)

அமிர்தம் மருந்தகங்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகள் ஆகியவற்றோடு கூடவே இதய நோய்களுக்கான உள்வைப்பு கருவிகள் ஆகியவற்றை தற்போதைய சந்தைவிலையில் 60 முதல் 90 சதவீத கழிவுடன் விற்பனை செய்கின்றன.

  • இதுவரையில் 83 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • இதுவரையில் மொத்தம் 17.97 லட்சம் நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளன.
  • இதுவரையில் மொத்தம் ரூ. 71.67 கோடிக்கான மருந்துகளை விற்பனை செய்துள்ளன.
  • நோயாளிகளுக்கு விற்பனை செய்த மருந்துகளின் குறைந்தபட்ச விற்பனை விலையின் மொத்த மதிப்பு ரூ. 175.23 கோடி.
  • இதுவரையில் நோயாளிகள் இதன் மூலம் பெற்ற சேமிப்புத் தொகை ரூ. 103.55 கோடி.

காயகல்பம்

  • பொதுமக்களின் நல்வாழ்வுக்கான சேவை மையங்களில் தூய்மை, சுகாதாரம், தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை வளர்த்தெடுக்க காயகல்ப விருதுகள் வழங்குவது துவங்கப்பட்டது. தூய்மை, சுகாதாரம், தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான மரபுவழிகளின் தரங்களை சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நிறைவேற்றியதற்காக பொதுமக்களின் நல்வாழ்வுக்கான சேவை மையங்களுக்கு விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 2015-16ஆம் ஆண்டில் மாவட்ட சுகாதார நிலையங்களுக்கான காயகல்ப விருதுகள் அமல்படுத்தப்பட்டன. 2016-17ஆம் ஆண்டில் இது மக்கள் நல்வாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இத்தகைய மையங்களில் செயல்பாட்டை மேம்படுத்தவும், தொடர்ந்து நிலைநிறுத்தவும், ஊக்கப்படுத்தவும் 70% மதிப்பெண்களைப் பெற்ற போதிலும் குறிப்பிட்ட ஆண்டில் மேல்மட்ட முதல், இரண்டாவது இடங்களை பிடிக்க முடியாத சேவை மையங்களுக்கு பாராட்டுப் பத்திரமும் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
  • 2015-16ஆம் ஆண்டில் 84 மாவட்ட சுகாதார நிலையங்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 2016-17இல் 218 மருத்துவமனைகளுக்கு பாராட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

தேசிய டயாலிசிஸ் சேவைத் திட்டம்

  • ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவைகளை வழங்குவதற்கான அனைத்து மாநிலங்களுக்கும் உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட மருத்துவமனைகளில் பொது-தனியார் கூட்டு முறையில் டயாலிசிஸ் சேவைகளை வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் மாநிலங்கள்/ துணைநிலை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
  • இதன்படி, இத்தகைய சேவை மையங்கள் ஒவ்வொன்றிலும் 6 டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்படும். இது 10 இயந்திரங்களாக பின்னர் விரிவுபடுத்தப்படும்.
  • இதுவரையில் 1,069 டயாலிசிஸ் சேவை மையங்களும், 2,319 டயாலிசிஸ் இயந்திரங்களும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • இதுவரையில் 1,06,717 நோயாளிகள் இந்த சேவையை பெற்றுள்ளனர். மொத்தம் 11,04,118 டயாலிசிஸ் அமர்வுகள் நடைபெற்றுள்ளன.

 

புதிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்

 

  • தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைத் திட்டத்தைத் துவக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தற்போது அரசின் இறுதிப்படுத்தல் நிலையில் உள்ளது. இதன்படி ஏழ்மையான, பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 1 லட்சம் அளவிற்கு மருத்துவப் பாதுகாப்பு வழங்கப்படும்.
  • இந்தப் பிரிவினரில் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மேலும் ரூ. 30,000 வரையிலான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூத்த குடிமக்களுக்கான வசதி 2016 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

சர்வதேச யோகா தினம்

  • உள்நாட்டிலும், உலகம் முழுவதிலும் யோகாவை பரப்புவது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாகக் கடைப்பிடிப்பது.
  • 2016ஆம் ஆண்டில் இது சண்டிகர் நகரில் துவங்கியது.
  • மனித இனத்தின் அறியவொண்ணாத கலாச்சார பாரம்பரியம் என்ற யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் விளையாட்டுக் கட்டமைப்பு மற்றும் கருவிகள் ஆகியவற்றிலும் இது சேர்க்கப்பட்டுள்ளதோடு, அனைத்துப் பள்ளிகளிலும் உடற்பயிற்சி நடவடிக்கைகளின் அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

                             *  *  *  *  *



(Release ID: 1506010) Visitor Counter : 293


Read this release in: English