நிதி அமைச்சகம்
பொருளாதாரம்
பணமதிப்பு ரத்து நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2017 4:22PM by PIB Chennai
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தல்- குறைந்த ரொக்கப் பண பொருளாதாரம்
- எனது கைபேசி எனது வங்கி எனது பணம் செலுத்தல்: குறைந்த ரொக்கப் பணம் உடைய பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவும், பணம் செலுத்துவதை மக்களின் கைபேசிக்குக் கொண்டு வரவும் ஒன்றுபட்ட பணம் செலுத்தும் வழிவகையினை அடிப்படையாகக் கொண்ட பீம் கைபேசி செயலி அறிமுகம்.
- இதுவரையில் 1 கோடியே 25 லட்சம் பேர் பீம் கைபேசி செயலியை கையாண்டுள்ளனர். பீம் செயலி மூலமான மொத்த பரிவர்த்தனை கிட்டத்தட்ட 50 லட்சம் ஆகும். 2016 டிசம்பர் 30 வரை ரூ. 1407 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
- 2017 ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி அன்று நாக்பூரில் பீம் –ஆதார் மேடை பிரதமர் துவக்கி வைத்தார்.
- டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை வளர்த்தெடுக்க பண ஊக்கத்தொகை அறிவிப்பு – அதிர்ஷ்டசாலி குடிமக்கள் திட்டம், டிஜிட்டல் முறையிலான வர்த்தகர்கள் ஊக்கத் திட்டம்.
- ரொக்கப் பண பரிவர்த்தனையை குறைந்த அளவிற்கு பயன்படுத்தும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்து முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
- 2017-18 நிதியாண்டில் ஒன்றுபட்ட பணம் செலுத்தும் செயல்முறை (யுபிஐ) கட்டமைப்பற்ற கூடுதல் சேவைக்கான புள்ளிவிவரம், ஆதார் மூலமான பணம் செலுத்தல், உடனடியாக பணம் செலுத்துவதற்கான சேவை, ரூபே டெபிட் கார்டுகள் (கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளும் முறை) ஆகிய முறைகளில் 2500 கோடி டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்வது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விற்பனை இடங்களில் அட்டைகள் மூலமாக செலுத்துவதற்கு போதுமான தேய்ப்பு இயந்திரங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 2017 மார்ச் 31க்குள் வங்கிகள் 10 லட்சம் விற்பனைக்கான இயந்திரங்களை நிறுவ வேண்டும் என்ற இலக்கிற்கு பதிலாக 2017 மார்ச் 19 வரை 11 லட்சம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- ரிசர்வ் வங்கிக்குள் பணம் செலுத்துவதற்கான ஒழுங்கமைப்பு வாரியம் உருவாக்கப்படும்.
- டிஜிட்டல் முறையில் நிதித் துறையில் உள்வாங்கிக் கொள்வதற்கான திட்டம்
- 2016 டிசம்பர் 2 முதல் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறைகளை பயன்படுத்திக் கொள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதில் பங்கு பெற உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜி எஸ் டி
- ஒரு நாடு – ஒரு வரி, ஒரு நாடு – ஒரு சந்தை
- நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
- 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
- 5%, 12%, 18%, 28% என நான்கு வரி விகிதங்கள்.
- சரக்குகள் மீதான ஒட்டுமொத்த வரிகள் 25 முதல் 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வியாபாரம் நடத்துவதை எளிமையாக்க வழிவகுப்பதோடு, வரி வசூலையும் அதிகரிக்கிறது.
ஜி எஸ் டி யின் பயன்கள்
- தொடர்ச்சியான வரிகளின் விளைவு குறைவதனாலும்
- விலைவாசி ஒட்டுமொத்தத்தில் குறைவதனாலும்
பணவீக்கம் குறையும்.
- பொதுவான தேசிய சந்தை
- சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கான சலுகைகளினால்
வியாபாரம் செய்வது எளிதாகும்
- சுய ஒழுங்குமுறையுடன் கூடிய இணையவழி வரிசெலுத்து முறை
- ஊடுருவல் அற்ற வெளிப்படையான வரிவிதிப்பு முறை ஆகியவற்றால்
‘கருப்பு’ வழி பரிமாற்றங்கள் குறையும் வாய்ப்பு
- எளிமையாக்கப்பட்ட வரிவிதிப்பு முறை
- பல்வேறு வகையான வரிகளின் எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றால்
நுகர்வோர் மேலும் அதிகமான விவரமறிந்தவர்களாக ஆக வாய்ப்பு
- சென்று சேரும் இடத்தை அடிப்படையாகக் கொண்ட வரியாக ஜி எஸ் டி இருப்பதால்
- அதிக நுகர்வோரைக் கொண்ட மாநிலங்கள் பெருமளவிற்குப் பயனடையும்
- மத்திய அரசின் விற்பனை வரி முழுமையாக நீக்கப்படுவதால்
ஏழை மாநிலங்கள் பெருமளவிற்குப் பயனடையும்
- ஏற்றுமதிகளுக்கு வரி விதிப்பு இல்லாத நிலை
- உள்நாட்டுத் தொழிலுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியின் மூலம் பாதுகாப்பு ஆகியவற்றால்
இந்தியாவில் தயாரிப்பது என்ற இயக்கத்திற்கு ஊக்கம் கிடைக்கும்
பொருளாதார ரீதியான அறிகுறிகள்
- பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வோர் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் 2014 மே மாதத்தில் 7.72% என்பதிலிருந்து 2017 பிப்ரவரியில் 3.65% ஆக குறைந்துள்ளது.
- 2012 முதல் 2016 வரை பணவீக்கம் சராசரியாக 7.79 சதவீதமாக இருந்தது. 2013 நவம்பரில் இது அதிகபட்சமாக 11.16 சதவீதமாகவும், 2015 ஜூலையில் குறைந்தபட்சமாக 3.69 சதவீதமாகவும் இருந்தது.
- பொருளாதார ஆய்வு: நுகர்வோர் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் கீழாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உணவு அடிப்படையிலான பணவீக்கம் 2.46 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2014 மே மாதத்தில் 8.88 சதவீதமாக இருந்தது.
- பொருளாதாரம் உயர் வளர்ச்சிப் பாதையில் நகரத் துவங்கியுள்ளது.
- 2014-15இல் 1.8 சதவீதமாக இருந்த இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2016 மூன்றாவது காலாண்டில் 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- உயர்ந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 சதவீதத்திற்கும் மேல்.
- இதுவரையில் இல்லாத வகையில் நேரடிஅந்நிய முதலீடு அதிகபட்சமாக 63 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
- நிதிசார் பற்றாக்குறை 3.2 சதவீதம் என்றவகையில் கட்டுக்குள் உள்ளது.
- 2014இல் 4 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையை எட்டியுள்ளது.
- குறைவான பணவீக்கம் : 2014இல் 11 சதவீதமாக இருந்தது சுமார் 4 சதவீதமாக உள்ளது.
- ரூபாய் மூலமான பரிமாற்ற விகிதம் கட்டுக்குள் உள்ளது.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம்
- இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா சிறந்து ஒளிவீசும் விண்மீனாகத் திகழ்கிறது. 2016-17 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக உயர்ந்து பணமதிப்பு ரத்து நடவடிக்கை குறித்த வதந்திகளை அம்பலப்படுத்தியது.
|
ஆண்டு
|
வளர்ச்சி விகிதம்(%)
|
|
2012-13
|
5.48
|
|
2013-14
|
6.54
|
|
2014-15
|
7.18
|
|
2015-16
|
7.93
|
|
2016-17
|
7.11
|
சர்வதேச அமைப்புகளால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த எதிர்கால மதிப்பீடுகள் ( 2016-17 க்கும் 2017-18க்கும் இடையே)
- ஐ.எம்.எஃப்: 6.6%(2016 நிதியாண்டு)7.2% (2017-18) 7.7% (2018-19 (2017 ஏப்ரல் உலக பொருளாதார நிறுவனத்தின் கருத்துப்படி)
- ஓ.இ.சி.டி. அமைப்பு: 7% (2016 நிதியாண்டு) 7.3 % (2017 நிதியாண்டு)
- உலக வங்கி: 7% (2016 நிதியாண்டு), 7.6% (2017 நிதியாண்டு)
- ஐ.நா. எஸ்காப் அறிக்கை: 7.3% (2016 நிதியாண்டு), 7.5% (2017 நிதியாண்டு)
- ஆசிய வளர்ச்சி வங்கி: 7% (2016 நிதியாண்டு), 7.8% (2017 நிதியாண்டு)
- மூடிஸ் அமைப்பு: 7.1% (2016 நிதியாண்டு & 2017 நிதியாண்டு)
- ஃபிட்ஸ் அமைப்பு: 7.1% (2016 நிதியாண்டு), 7.7% (2017-18)
- சிஎஸ்ஓ: 7.1 %
நேரடி அந்நிய முதலீடு (வணிகம்)
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நேரடி அந்நிய முதலீடு 48% அதிகரித்துள்ளது.
|
ஆண்டு
|
நேரடி அந்நிய முதலீடு (அமெரிக்க டாலர்கள் – பில்லியனில்)
|
|
2013-14
|
36.4
|
|
2014-15
|
44.9
|
|
2015-16
|
53.4
|
|
2016-17 (2016 டிசம்பர் வரை)
|
47.2
|
- உலகின் முதலீடுகளை மிகவும் அதிகமான அளவில் கவர்ந்திழுக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
- குறைந்த விலை, உயரிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதோடு உள்நாட்டு நுகர்வோர்களுக்கு பயனளிக்கும்.
அந்நியச் செலாவணி கையிருப்பு (வணிகம்)
- 2015ஆம் ஆண்டில்தான் இந்தியாவின் இதுவரையிலேயே மிக அதிகமான அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது.
- (2014 மே இறுதியில் இருந்த) 312 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதை ஒப்பு நோக்குகையில் (2017 மார்ச் 23 அன்று) 364 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அந்நிய செலாவணி கையிருப்பு இருந்ததை பரந்த அளவிலான பொருளாதார நிலைத்தன்மை உறுதிப்படுத்தியது.
- பரந்த அளவிலான பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த பத்தாண்டுப் பகுதியில் மிகக் குறைவான அந்நியச் செலாவணி கையிருப்பு 2013 செப்டம்பரில் இருந்தது.
பட்ஜெட் தொடர்பான சீர்திருத்தங்கள் (நிதி)
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 3 முக்கிய சீர்திருத்தங்கள் இருந்தன.
- நிதியாண்டு துவங்கியதிலிருந்தே அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சகங்கள் செயல்படுத்த உதவும் வகையில் பட்ஜெட் தொடர்பான பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் வைப்பதை பிப்ரவரி 1ஆம் தேதி என முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது.
- அரசின் நிதித் தொடர்பான கொள்கைகளின் நடுப்பகுதியில் ரயில்வே துறையை கொண்டுவந்து வைப்பதற்காக ரயில்வே துறைக்கான பட்ஜெட்-ஐ பொது பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டது.
- பல்வேறு துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி குறித்து முழுமையானதொரு பார்வையை ஏற்படுத்த திட்டச் செலவுகள், திட்டமில்லாத செலவுகள் என இதுவரை இருந்து வந்த வகைப்படுத்தும் முறை அகற்றப்பட்டது.
வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது (தொழிற்கொள்கை மற்றும் திட்டங்களுக்கான துறை)
- வர்த்தகம் செய்வதை எளிதாகச் செய்யும் நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் மேம்பாடு ஏற்பட்டது.
- சுய சான்றிதழ் முறை
- எளிமையாக்கப்பட்ட விதிகள்
- தேவையற்றதாக இருந்த சுமார் 1200 சட்டங்கள் நீக்கப்பட்டன.
- பெரும்பாலான ஒழுங்கமைப்புச் செயல்பாடுகள் இணைய வழியில் பதிவேற்றப்பட்டன.
- பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பொருட்களில் 60% பொருட்கள் அனுமதி பெற்றுத் தயாரிக்கும் செயல்முறையிலிருந்து எடுக்கப்பட்டது.
- வீடு வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கவும், வீட்டு வசதித் துறையில் மேலும் அதிகமான வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் கட்டுமானத் தொழில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- மின்சார உற்பத்தி மற்றும் உர உற்பத்திக்குத் தேவையான இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடு.
வங்கிகளை சீரமைத்து, மறுகட்டமைப்புக்கு உட்படுத்தல்
- ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளாகச் செயல்பட்டு வந்த 5 வங்கிகள் ஸ்டேட் வங்கியோடு இணைக்கப்பட்டன.
கட்டுமானத் தொழில் மசோதா
- வீடு வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கவும், வீட்டு வசதித் துறையில் மேலும் அதிகமான வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும் கட்டுமானத் தொழில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தங்க சவரன் பணமுறிகள்
- நேரடியான தங்கத்திற்கான தேவைகளைக் குறைக்க புது வகையான நிதி முதலீட்டு வசதியை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 1044 கோடி மதிப்புள்ள 3986 கிலோ தங்கத்திற்கான பணமுறிகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்திய தங்க நாணய திட்டம்
இந்தியாவில் தயாரிப்போம் என்ற இயக்கத்தின் கீழ் உள்நாட்டு தங்க நாணயங்களுக்கு ஊக்கமளிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழிலாளர் நல சீர்திருத்தங்கள்
உழைப்பே வெற்றி தரும்
- தொழிலாளர் நல இணையதளம்: தொழிலாளர்களுக்கு தனிச்சிறப்பான அடையாள எண் ஒதுக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களை இணையம் மூலமாகவே பதிவு செய்ய ஏற்பாடு.
- தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாளத்தை வழங்குவதற்கான தனிச்சிறப்பான தொழிலாளர் அடையாள எண் ஒதுக்கப்பட்டன. தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் 6.57 கோடி எண்களை தொழிலாளர்களுக்கு வழங்கியது. இதில் 2.5 கோடி எண்கள் கைபேசி மூலமாகவே செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
- விவர அறிக்கைகளை தாக்கல் செய்வது, தொழிலாளர் துறையில் பதிவு செய்வது, பரிசோதனை ஏற்பாடுகள் போன்றவற்றிலிருந்து ஒரு சில தொழில்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- பெண்களும் இரவு நேரப் பணிகளில் ஈடுபடவும், கூடுதல் வேலைநேரத்திற்கான மணி நேரங்களை அதிகரிப்பது ஆகியவற்றை அனுமதிக்கும் வகையில் 1948ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- மேலும் அதிகமான பயிற்சியாளர்களை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 1961ஆம் ஆண்டின் பயிற்சியாளர்கள் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
- ஆண்டுக்கு ஒருமுறை இணையம் மூலமாகவே விவர அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு.
- பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தர முறைகளை மேம்படுத்த இந்திய தரமுறைக்கான கழகத்தின் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- வேலைவாய்ப்பு சேவைக்கான தேசிய திட்டம்: வேலை வழங்குவோர், பயிற்சியாளர்கள், வேலைவாய்ப்பு அற்றவர்கள் ஆகியோரை ஒரே மேடையில் கொண்டுவருவதற்கான ஏற்பாடு. இதில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் 3.5 கோடி பேர் இதுவரை பதிவுசெய்துள்ளனர்.
* * * * *
(வெளியீட்டு அடையாள எண்: 1506003)
வருகையாளர் எண்ணிக்கை : 320