PIB Headquarters
டிஜிட்டல் இந்தியா
Posted On:
13 OCT 2017 4:19PM by PIB Chennai
டிஜிட்டல் முறை கல்வியறிவுக்கான தேசிய இயக்கம்
- 2015 ஜூலை 1 அன்று டிஜிட்டல் இந்தியா இயக்கத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.
- பங்கேற்கின்ற, வெளிப்படையான, பிரதிபலிக்கின்ற அரசினை உருவாக்குவதற்கான இயக்கம் இது.
- டிஜிட்டல் முறையில் வலிமை பெற்ற அறிவுடன் கூடிய பொருளாதாரத்தை நோக்கி நாட்டை மாற்றியமைப்பதற்கான மிகப்பெரும் முன்னடி வைப்பு.
- டிஜிட்டல் முறையான லாக்கர், இணைய வழி கல்வி, இணைய வழி சுகாதாரம், இணைய வழி கையெழுத்து, தேசிய கல்வியுதவித் தொகைக்கான இணைய தளம் போன்ற ரூ. 1 லட்சம் கோடி மதிப்புடைய பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.
- நாட்டின் குடிமக்கள் அரசின் சேவைகளை மின்னணு முறையில் பெறுவதை உறுதிப்படுத்தக் கூடிய திட்டங்கள் இதில் அடங்கும். மிக நவீனமான தகவல்கள், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றின் பயன்களையும் மக்கள் இதன் மூலம் பெறுவார்கள்.
- வைஃபை, உடனடி தொடர்புக்கான அகன்ற அலைவரிசை தொடர்பு ஆகிய வசதிகளுடன் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்படும்.
- 2020ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் டிஜிட்டல் முறையிலான கல்வியறிவைப் பெற்றவராக ஆக்குவதற்கென டிஜிட்டல் முறையிலான தேசிய கல்வியறிவு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
- 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிப்பது என்பதே டிஜிட்டல் முறையிலான தேசிய கல்வியறிவு இயக்கத்தின் இலக்கு 2016 ஜூன் மாதமே எட்டப்பட்டுவிட்டது.
- 42.5 லட்சம் பேருக்கு டிஜிட்டல் முறையிலான கல்வித் திட்டமான திஷாவின் இலக்காக இருந்தது. இந்த இலக்கு 2016 டிசம்பரிலேயே எட்டப்பட்டுவிட்டது.
- பிரதம மந்திரியின் டிஜிட்டல் முறையிலான கல்வித் திட்டத்தின் இலக்கு இரண்டு ஆண்டுகளில் 6 கோடி பேரை டிஜிட்டல் முறையிலான கல்வியறிவு பெற்றவராக ஆக்குவதாகும்.
ஆதார்
- ஆதார் பதிவு (2014 மே 31இல் இருந்த) 63.22 கோடியிலிருந்து (2017 மார்ச் 31இல்) 113.26 கோடியாக அதிகரித்துள்ளது.
- 18 வயதிற்கு மேற்பட்ட ஆதார் பதிவு செய்தவர்களின் சதவீதம் (2014 மே 31இல்) 62 சதவீதம் என்பதில் இருந்து (2017 மார்ச் 31இல்) கிட்டத்தட்ட 100 சதவீதமாக உள்ளது.
- (2014 மே 31இல்) ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 7 கோடி என்பதிலிருந்து (2017 மார்ச் 31இல்) 43 கோடியாக அதிகரித்துள்ளது.
- 2016 செப்டம்பரில் இருந்து ஆதார் அடிப்படையிலான விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் 15.28 கோடி கைபேசிக்கான சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
- ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பணம் செலுத்து முறையில் 125 வங்கிகள் இணைந்துள்ளன. இதன் மூலம் 2014 மே 31இல் வெறும் 0.46 கோடியாக மட்டுமே இருந்த இந்த பணம் செலுத்து முறையின் மூலமாக பரிவர்த்தனைகள் 2017 மார்ச் 15 அன்று 42.7 கோடியாக உயர்ந்தது.
- ஆதார் எண்ணைப் பெறுவதற்காக பதிவு செய்யும் போக்கு 2014 மார்ச் முதல் 2014 மே வரை நாளொன்றுக்கு 3-4 லட்சமாக இருந்தது 2016 அக்டோபர் வரை இது நாளொன்றுக்கு 5-6 லட்சமாக இருந்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பிறகு ஆதார் எண்ணுக்காகப் பதிவு செய்வது/ அதன் விவரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் நாளொன்றுக்கு 7-8 லட்சமாக இருந்தது.
- 1 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி செலுத்துவோர் தங்கள் ஆதார் எண்ணை தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.
- சுமாராக 70 சதவீதம் பேர் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பாஸ்போர்ட்டிற்கான மனுசெய்துள்ளனர்.
பொது சேவை மையங்கள்:
டிஜிட்டல் இந்தியாவின் பயன்களை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்வதற்காக 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களை உள்ளடக்கிய விரிவான வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஏழைகள், பொதுவாழ்வில் புறக்கணிக்கப்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோரிடையே டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தும் தொழில்முனைவர்களை வளர்த்தெடுத்துள்ளது.
34,000க்கும் மேற்பட்ட பெண்கள் மக்களுக்கு டிக்கெட் பதிவு, தொலைதூர மருத்துவ ஆலோசனை, மக்கள் சுகாதார வசதிகள், ஆதார் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் இந்த மையங்களில் பணி செய்து வருகின்றனர்.
2014 மே மாதத்தில் இந்த மையங்கள் மொத்தம் 83,000 மட்டுமே இருந்தன.
பாரத் நெட் : நெடுஞ்சாலைகளிலிருந்து இணையவழி நெடுஞ்சாலைகளும் கிராமங்களில் அகண்ட அலைவரிசை வசதியும்
பாரத் நெட் முறையின் கீழ் இந்தியாவின் கிராமங்களுக்கு ஒளியிழை வலைப்பின்னல் தொடர்பு வசதி மிக வேகமாக வளர்ந்துள்ளது.
1.77 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு ஒளியிழை கேபிள்கள் பதிக்கப்பட்டு இலக்கு வைக்கப்பட்டிருந்த 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 78,220 கிராம பஞ்சாயத்துகளை சென்றடைந்துள்ளன. 2014 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 59 மட்டுமே.
தொலைபேசித் துறை
- தொலைபேசித் துறையில் நேரடி அந்நிய முதலீடு புதிய உச்சத்தைத் தொட்டது:
- 2016-17 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் தொலைபேசித் துறையில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 10 பில்லியன் (10 ஆயிரம் கோடி) அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
- இந்த முதலீடு 2013-14 இல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2014-15இல் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2015-16இல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.
- பி எஸ் என் எல் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்டுவது.
- தொலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது.
- உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய பயனாளிகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. 2016இல் இந்த எண்ணிக்கை 1058.86 மில்லியன் பயனாளிகள் ஆகும். 2014 ஜூனில் இருந்து 79 மில்லியன் பயனாளிகள் இதில் இணைந்துள்ளனர்.
- 2014 ஜூனில் 75.8 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தொலைபேசி அடர்த்தி 2016இல் 83.36 சதவீதமாக அதிகரித்தது.
- அகண்ட அலைவரிசை சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2014 ஜூனில் 68.83 மில்லியனாக இருந்தது. இது 2016இல் 120.88 மில்லியனாக உயர்ந்து, 2017 இறுதிக்குள் 250 மில்லியனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2014 டிசம்பரில் 300 மில்லியனாக இருந்த இணைய வெளி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2017 நடுவில் 450 மில்லியன் என்ற அளவை எட்டக் கூடும். 200 மில்லியன் என்பதிலிருந்து 300 மில்லியன் என்ற அளவை எட்டிப்பிடிக்க 3 ஆண்டுகள் பிடித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய ஒளியிழை வலைப்பின்னல் திட்டம்:
- பிரதமரின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் இதைச் செயல்படுத்துவதற்கு முன்வரும் மாநிலங்களுக்கு அனுமதியளிப்பதன் மூலம் 2.5 லட்சம் கிராமங்களை வலைப்பின்னலில் இணைப்பதற்கான 7.5 லட்சம் கிலோமீட்டர் நீள தேசிய ஒளியிழை வலைப்பின்னல் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
- 2017 மார்ச் 12 வரை 1,77,144 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒளியிழை வலைப்பின்னல் பணி 78,220 கிராம பஞ்சாயத்துகளை எட்டியுள்ளது.
- (2014 முதல் 2017 ஜனவரி வரை) இத்திட்டத்திற்காக ரூ. 8384 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
5. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் (2017-18 பட்ஜெட்)
- பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் இறுதிக்குள் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் அதிவேக அகண்ட அலைவரிசை தொடர்பின் மூலம் இணைக்கப்படும்.
- டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் தொலைதூர மருத்துவ ஆலோசனை, கல்வி, தனித் திறன் ஆகியவற்றை வழங்க டிஜிட்டல் முறையிலான முன்முயற்சி துவங்கப்படவுள்ளது.
6. மின்னணு உற்பத்தி
- புதிய தொழில்முயற்சிகளுக்கான மூலதன நிதிக்கு உதவி செய்ய மின்னணு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
- மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதற்குரிய சூழ்நிலையை உருவாக்க திருத்தியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத் தொகைத் திட்டம் மற்றும் மின்னணு மேம்பாட்டு நிதி ஆகிய ஊக்கத்திட்டங்களுக்கென 2017-18 நிதியாண்டிற்கு ரூ. 745 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1506001)
Visitor Counter : 1046