PIB Backgrounder
இளம் இந்தியா – துடிப்பான இந்தியா
प्रविष्टि तिथि:
13 OCT 2017 4:14PM by PIB Chennai
உதவித் தொகைகள்
- 3.7 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித் தொகை.
- கடந்த 3 ஆண்டுகளில் கல்லூரிகளில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கென 3.30 லட்சம் கல்வி உதவித் தொகைகள்.
- யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில், மத்திய அரசு ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவித் தொகை ரூ. 1273 கோடி.
- மேல்நிலைப்பள்ளிக் கல்விக்கென பெண்களுக்கான தேசிய ஊக்கத்திட்டத்தின் கீழ் ரூ. 3,000/- ஊக்கத்தொகை என்ற அளவில் 9.65 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதிலும் சிறந்த கல்லூரிகளில் தொழில்முறைக் கல்வியை முடிக்க 24,200 ஜம்மு-காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை.
- உதவித் தொகைக்கான அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு முனை தீர்வாக தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
நிமிர்ந்து நிற்கும் இந்தியா (நிதி)
- தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பெண்களிடையே தொழில்முனைவுத் திறனை வளர்த்தெடுக்க 2016 ஏப்ரல் 5ஆம் தேதியன்று இத்திட்டம் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 2.5 லட்சம் தொழில்முனைவர்கள் பயனடைவர்.
- 15,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்களின் கடன் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.
- 2016-17 நிதியாண்டில் இத்திட்டத்திற்கென ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நிமிர்ந்து நிற்கும் இந்தியா திட்டத்தின் மூலம் இதுவரையில் 18,565 பெண்களும், 4,756 தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரும் பயனடைந்துள்ளனர்.
- புதிய திட்டமான திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடு நிதியுதவித் திட்டத்தின் கீழ் நெசவுத் துறையில் வழங்கப்பட்டுள்ள மூலதன ஊக்குவிப்புத் தொகை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை குறிப்பாக பெண்களுக்கென உருவாக்கும்.
தொடங்கிடு இந்தியா திட்டம் (டிஐப்பிப்பி- தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சிக்கான துறை)
- இளைஞர்களிடையே தொழில்முனைவை வளர்த்தெடுக்க 2016 ஜனவரி 16 அன்று தொடங்கிடு இந்தியா திட்டம் துவக்கப்பட்டது.
- புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.
- புதிய தொழில் முயற்சிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு வரி விலக்கு.
- புதிய தொழில்முயற்சிகளுக்கென ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஊழியர்களாக பணிபுரியும் தொழில் முனைவோருக்கு பங்குகளை வழங்குவதற்கு புதிய தொழில்முயற்சிகளுக்கு அனுமதி.
- அனுமதி வழங்கப்பட்ட புதிய தொழில்முயற்சிகள்
- அங்கீகரிப்பிற்காக 1835 மனுக்கள் பெறப்பட்டன; அவற்றில் தேவையான ஆவணங்களைக் கொண்டிருந்த 713 நிறுவனங்களுக்கு புதிய தொழில்முயற்சிகள் என தொழில்முயற்சி மற்றும் வளர்ச்சிக்கான துறை அங்கீகாரம் வழங்கியது.
வரிச் சலுகைகளுக்காக 146 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் வரிச் சலுகை பெறுவதற்கென 10 நிறுவனங்கள் தனிப்பட்ட கண்காணிப்பு வாரியத்தால் அனுமதி அளித்தது.
தொழில்முயற்சிகளை வளர்ப்பதற்காகவும் நிதியுதவி ஏற்பாடு செய்வதற்காகவும் தொடங்கிடு இந்தியா மையம் 270+ தொழில் முயற்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
முத்ரா (நிதியுதவி)
பிரதமரின் முத்ரா (குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மறுசுழற்சி நிதிக்கான முகமை ) திட்டம்
- இளைஞர்களிடையே தொழில்முனைவுக்கான உணர்வை வளர்த்தெடுக்க 2015 ஏப்ரல் 8 அன்று பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
- சிசு, கிஷோர், தருண் என்ற மூன்று வகையான கடன்களை வங்கிகளிலிருந்து எவ்வித உத்தரவாதமும் இன்றி பெற வகை செய்கிறது.
- 13.04.2017 வரை பெற்றுள்ள புள்ளிவிவரங்களின்படி 2016-17 நிதியாண்டில் 4 கோடிக்கும் மேற்பட்ட கடன்பெறுவோருக்கு ரூ. 1.80 லட்சம் கோடி அளவிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
- 2016-17 நிதியாண்டில் இதற்கென ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 1.22 லட்சம் கோடி எனில் 2017-18 நிதியாண்டிற்கென ரூ. 2.44 லட்சம் கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கடன்களைப் பெற்றவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் ஆவர்.
திறன்மிகு இந்தியா (திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான அமைச்சகம்)
பிரதமரின் திறன்மிகு இந்தியாவிற்கான திட்டம்:
- இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியை வழங்குவதற்கான திட்டம் 2015 ஜூலை 15 அன்று தொடங்கப்பட்டது.
- திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான தேசிய கொள்கை அறிவிக்கப்பட்டது.
- 2022ஆம் ஆண்டிற்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியை வழங்குவது என்பது இதன் இலக்காகும்.
- 596 மாவட்டங்களில் 8,479 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- 375 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற மொத்தம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
- 19.85 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2.49 லட்சம் பேர் (2015-16ஆம் ஆண்டில்) பிரதமரின் திறன்மிகு இந்தியாவிற்கான திட்டத்தின் பகுதியாக வைக்கப்பட்டுள்ளனர்.
- (2016-2020 காலப்பகுதிக்கான) பிரதமரின் திறன்மிகு இந்தியாவிற்கான திட்டத்திற்கென பயிற்சி வழங்குவோருக்கு இதுவரையில் குறுகியகால பயிற்சியின் கீழும், முன் கூட்டிய கல்வியை கண்டறிவதற்காகவும் என 16.37 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டங்களுக்கென 2.72 லட்சம் பேரை சேர்ப்பது எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் திறன்மிகு இந்தியாவிற்கான திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
- ஐ.மு. கூட்டணி அரசின் கீழ் செயல்பட்டு வந்த ஸ்டார் திட்டத்தில் பயனடைந்தவர்களை விட 40 சதவீதம் அதிகம் பேர் பிரதமரின் திறன்மிகு இந்தியா திட்டம் -1இன் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
சங்கல்ப்
- வாழ்க்கைத் தரத்தை வளர்த்தெடுப்பதற்கான திறனை பெறுவது, அறிவு விழிப்புணர்ச்சி ஆகியவற்றுக்கான திட்டம் (சங்கல்ப்) ரூ. 4000 கோடி செலவில் துவங்கப்படவுள்ளது. 3.5 கோடி இளைஞர்களுக்கு சந்தைக்குப் பொருத்தமான பயிற்சியை சங்கல்ப் வழங்கும்.
பிரதான் மந்திரி யுவ யோஜனா (திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான அமைச்சகம்) பிரதமரின் இளைஞர்களுக்கான திட்டம்
- இளைஞர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்க 2016 நவம்பர் 9 அன்று இத்திட்டம் துவங்கப்பட்டது.
- இளைஞர்களுக்கான பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் 2.0 என்பது பிரதமரின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் 2.0 (திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான அமைச்சகம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய இளம் தலைவர்கள் திட்டம்
- ஐந்து அம்சங்களுடன் இளைஞர்களிடையே தலைமை தாங்கும் திறமைகளை வளர்த்தெடுக்க 2014 டிசம்பரில் புதியதொரு திட்டம் துவக்கப்பட்டது.
- நேரு யுவ கேந்திரா சங்கதன் இதில் 9.25 லட்சம் இளைஞர்களை ஈடுபடுத்தியது. 12069 வட்ட அளவிலான இளைஞர்கள் பேரவைகளையும், 80303 கிராம அளவிலான இளைஞர்கள் பேரவைகளையும் நடத்தியது.
- 2013-14-இல் இதற்கென ஒதுக்கப்பட்ட ரூ. 275-290 கோடி நிதியானது 2016-17இல் ரூ. 500 கோடியாக உயர்த்தப்பட்டது.
விளையாடு இந்தியா – விளையாட்டுக்கு ஊக்கமளிக்கும் திட்டம் (இளைஞர் நலம்)
- விளையாட்டிற்கான முதல் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டான 2016-17 முதல் மத்திய அரசுத் துறை திட்டமாக இது துவக்கப்பட்டுள்ளது.
- 2020ஆம் வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வாங்க வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியவும், உதவி செய்யவும் என ஒலிம்பிக்ஸ் மேடை இலக்குத் திட்டம் துவங்கப்பட்டது.
- அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாரிப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
* * * * *
(रिलीज़ आईडी: 1505997)
आगंतुक पटल : 364
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English