மத்திய அமைச்சரவை
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கும் (SEBI), குவைத்தின் மூலதன சந்தைகள் ஆணையத்துக்கும் (CMA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
11 OCT 2017 8:41PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குவைத்தின் மூலதன சந்தைகள் ஆணையத்துடன் (CMA), பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு (SEBI) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் இடையேயான பொருளாதார இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளிலும் பங்குச்சந்தைகளை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்ற வழிமுறையை வலுப்படுத்தவும், பங்களிப்பை செய்யும். குவைத்தின் மூலதன சந்தைகள் ஆணையத்துக்கும், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கும் இடையே வெளிநாடுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் மதிப்பைக் கூட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
******
(Release ID: 1505845)