மத்திய அமைச்சரவை
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ‘'தொழிற் கல்வி பயிற்சித் திட்டம் (TITP)' குறித்த ஒத்துழைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
11 OCT 2017 8:40PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ``'தொழிற் கல்வி பயிற்சித் திட்டம் (TITP)' குறித்த ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் துறை அமைச்சர் அக்டோபர் 16018, 2017ல் பயணம் மேற்கொள்ளும்போது டோக்கியோவில் இந்த ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை (MoC) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவில் இருந்து தொழிற்கல்வி பயிற்சியாளர்களை, பணியுடன் கூடிய பயிற்சிக்கு ஜப்பானுக்கு அனுப்புவதற்கு, தொழிற் கல்வி பயிற்சித் திட்டம் என்ற முக்கியமான திட்டம் வகை செய்கிறது. மூன்று மாதங்கள் முதல் ஐந்தாண்டுகள் வரை இந்தப் பயிற்சிக்கு அனுமதி உண்டு. திறன் மேம்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு இந்த ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
******
(Release ID: 1505837)