பிரதமர் அலுவலகம்

நானாஜி தேஷ்முக் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்ட தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 10 OCT 2017 7:38PM by PIB Chennai

புது தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பூசா வளாகத்தில் நாளை (11 அக்டோபர், 2017) நானாஜி தேஷ்முக் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

“தொழில்நுட்பம் மற்றும் ஊரக வாழ்க்கை” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள கண்காட்சிக்கு பிரதமர் வருகை தருகிறார். இந்த கண்காட்சியில் நூறுக்கும் மேற்பட்ட சிறந்த நடைமுறைகளை மற்றும் பயன்பாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஊரக படைப்பாளிகளுடன் அவர் கலந்துரையாடுவார்.

நானாஜி தேஷ்முக் மற்றும் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோருக்கு மலரஞ்சலி செலுத்துவார்.

நானாஜி தேஷ்முக் நினைவாக அஞ்சல் தலையை பிரதமர் வெளியிடுகிவார். மாவட்ட அளவில் மேம்பாட்டு பணிகளை கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான தளத்தை அவர் தொடங்கிவைக்கிறார். கிராம் சம்வாத் செயலியையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த செயலியில் ஊராட்சி ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.  “தகவலிலிருந்து அதிகாரமளித்தல்” என்ற பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் தாவர உயிரியல் வசதியை தொடங்கி வைக்கிறார்.

பல்வேறு சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி ஒன்றியங்கள், நீர் பாதுகாப்பு படைப்பாளிகள் மற்றும் பிரதமர் குடியிருப்புத்திட்ட பயனர்கள் சுமார் 10000 பேர் கொண்ட கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

***


(रिलीज़ आईडी: 1505773) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English