ரெயில்வே அமைச்சகம்
பெண் பயணிகளுக்கு இடையூறின்மை மற்றும் பாதுகாப்புக்க இந்திய ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கைகள்
Posted On:
28 JUL 2017 8:27PM by PIB Chennai
தொடர் வண்டிகளில் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்க இடையூறின்மை மற்றும் பாதுகாப்புக்கு இந்திய ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கைகள்:
- எளிதில் இலக்காகும் மற்றும் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்கள்/ பிரிவுகளில் (சராசரியாக) 2500 தொடர் வண்டிகள் தினமும் ரயில்வே பாதுகாப்புப் டையினரால் பாதுகாக்கப்படுகின்றனர். இத்துடன் கூடுதலாக 2200 தொடர் வண்டிகள் பல்வேறு மாநில அரசுகளின் ரயில்வே காவல் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன.
- இடர்பாட்டின் போது பயணிகளுக்குப் பாதுகாப்பு தொடர்பான உதவிக்கு இந்திய ரயில்வேயில் எண் 182 செயல்பாட்டில் உள்ளது.
- தொடர் வண்டிகள் போகும் போது நிற்கும் நிலையங்களிலும் பெண்களுக்கான பெட்டிகளில் கூடுதல் விழிப்போடு இருக்குமாறு பாதுகாப்பாளர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
- பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்குள் ஆண் பயணிகள் நுழைவதைத் தடுக்க தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்படுகின்றன. கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் ரயில்வே சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
- பயணிகளுக்கு இடையூறின்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய ரயில்வேயின் 344 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
- பெரு நகரங்களில் ஓடும் மகளிருக்கான தனித் தொடர்வண்டிகளுக்கு ஆர்பிஎஃபின் பெண் காவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
- பெரு நகரங்களின் புறநகர் தொடர் வண்டிகளில் உள்ள பெண்களுக்கான பெட்டிகள் ஆர்பிஎஃப், ஜிஆர்பி காவலர்களால் பாதுகாக்கப்படுகிறது. பெண்பயணிகளின் சரியான பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய தொடர்வண்ழகளில் இரவின் பிற்பகுதியிலும் அதிகாலையிலும் ஊழியர்கள் பணியமர்த்தப் படுகிறார்கள்.
- ஜிஆர்பியால் முறைப்படி குற்றங்கள் பதிவு மற்றும் புலனாய்வு செய்வதை உறுதிப்படுத்த மாநில காவல் துறையின் அனைத்து நிலைகளிலும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு சந்திப்புகளை ஆர்பிஎஃப் நடத்துகிறது.
மாநிலங்களவையில் 28.07.2017 (வெள்ளி) அன்று கேள்வி ஒன்றுக்கு ரயில்வே துறை இணையமைச்சர் திரு. ராஜென் கோஹெய்ன் எழுத்து மூலம் அறித்த பதிலில் உள்ள தகவல் அடிப்படையில் இந்தப் பத்திரிக்கை செய்தி உள்ளது.
******
(Release ID: 1505429)