ரெயில்வே அமைச்சகம்

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதிலிருந்து மக்களைத் தடுத்திட இந்திய ரயில்வேயால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 28 JUL 2017 5:45PM by PIB Chennai

பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வதிலிருந்து மக்களைத் தடுத்திட இந்திய ரயில்வேயால் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  1. பயணச்சீட்டு இல்லாப் பயணத்திற்கு எதிராக தொடர்ச்சியாகவும் திடீரென்றும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் காலத்தில் இவை தீவிரமாக்கப்படுகின்றன.
  2. ரயில்வே வாரியம் வகுத்தளித்த செயல் திட்டத்தின்படி ரயில்வே பாதுகாப்புப் படையினர், மாஜிஸ்ட்ரேட்டுகள் ஆகியோருடன் இணைந்து மறைந்திருந்து சோதனை, பெரும் குழு சோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  3. முன்பதிவு செய்யாத பிரிவுகளில் பயணச் சீட்டு இல்லாப் பயணம் செய்வதைத் தடுக்க மண்டல ரயில்வேக்களின் ஒவ்வொரு கோட்டத்திலும் முக்கியமான ரயில் நிலையங்களில் தீவிர சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. பயணச் சீட்டு பெற்ற பயணிகளின் பகுதிகளுக்குள் பயணச் சீட்டு இல்லாதோர் நுழைவதைத் தடுக்கவும் பயணச் சீட்டு இல்லாமல் பயணத்தைக் குறைக்கவும் குறிப்பிடத்தகுந்த / செயல் திறன் மிக்க எல்லா ரயில் நிலையங்களிலும் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
  5. மண்டல அலுவலகங்களால் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ரயில் நிலைய அறிவிப்புகள் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வழி பிரசுரங்கள் செய்யப்பட்டு பயணச் சீட்டு இல்லாப் பயணங்களைத் தவிர்க்குமாறு பயணம் செய்யும் மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

       ரயில்வே துறை இணை அமைச்சர் திரு. ராஜென் கோஹைன் மாநிலங்களவையில்28.07.2017 (வெள்ளி) அன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்த தகவல் அடிப்படையில் இந்தப் பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது.

******

 



(Release ID: 1505428) Visitor Counter : 52


Read this release in: English