சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார ஆவணங்கள்

Posted On: 28 JUL 2017 7:10PM by PIB Chennai

சுகாதாரத் தகவல் பரிமாற்றங்கள் உதவியுடன் நாடு முழுவதும் இணையத்தில் மருத்துவ சிகிச்சை வரலாறு கிடைக்கச் செய்வதற்காக குடிமக்களுக்கு மின்னணு சுகாதார ஆவணங்கள் (இஎச்ஆர்) உருவாக்க ‘ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் மேடை’ என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அமலுக்கு வரவுள்ளது.

     பல்வேறு சுகாதாரத் தகவல் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரப்படுத்துதல், ஒரே இயல்பாய் இருத்தல், தகவல் பெறுவதில் ஒருங்கிணைந்த செயல்பாடு, சேமித்தல், பரிமாற்றம், பயன்பாடு போன்றவற்றைக் கொண்டுவரும் நோக்கத்துடன் மின்னணு சுகாதார ஆவண நிலைபாட்டில் இந்தியாவுக்கான 2016 வெர்ஷன் 2016 டிசம்பரில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. (இந்நிலையில் முந்தைய வெர்ஷன் 2013 செப்டம்பரில் வெளியிடப்பட்டது)

     இதுபற்றி மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகளிலும் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆதரவுடன் செயல்படும் சுகாதார வசதி அமைப்புகளிலும் கணினிமயமாக்கும் பணிகளும் (மின்னணு ஆவணங்கள் உருவாக்குவதற்கான) மருத்துவமனை தகவல் முறை அமலாக்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

     நாடு முழுவதற்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுமுறை, இணையத்தில் கிடைத்தல், எளிதாகப் பெறமுடிதல் என்ற நிலையில் குடிமக்களுக்கு ……. முறை கிடைத்திருப்பதால் தொடர்ச்சியான கவனிப்பு நல்ல வாய்ப்பு கிடைத்தல், சிறந்த சுகாதாரப் பயன்விளைவு சிறந்த முடிவுக்கான உதவி ஆகியவை உறுதிசெய்யப்படுகிறது. நோய் கண்டறிய ஒரே மாதிரியான சோதனைகள் திரும்பத் திரும்ப செய்வதைத் தவிர்ப்பதால் செலவு குறைய இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

         (சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை) இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

******



(Release ID: 1505347) Visitor Counter : 55


Read this release in: English