சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அரிய மரபுசார் நோய்களுக்குக் கட்டணமில்லா சிகிச்சை
प्रविष्टि तिथि:
28 JUL 2017 7:10PM by PIB Chennai
இந்தியாவில் அரிய நோய்களின் சிகிச்சைக்கான தேசியக் கொள்கையை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியிருக்கிறது. தடுப்பு, விழப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவர்களுக்குப் பயிற்சி, மத்திய தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் குழு வகுத்தளிக்கும் அளவைக் கொண்டு சிகிச்சைக்கான நிதி உதவி, அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கு மருந்துகள் பற்றிய ஆய்வு மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், கட்டுப்படியாகும் செலவில் நோய் கண்டறிதல், மிகவும் கட்டுப்படியாக இருக்கும் வகையில் அரிய நோய்களுக்கு மருந்து தயாரிக்க நடவடிக்கைகள், சோதனைக் கூட இணைப்புகளை வலுப்படுத்துதல், உயர் மதிப்பு மையங்களை உருவாக்குதல் இன்னபிறவற்றை உள்ளடக்கி அரிய வகை நோய்களுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்து இந்தியாவின் திறன் வளர்ச்சியை முன்னேற்ற நிலையில் கட்டமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக, அரிய நோய்கள் உள்ள நோயாளிகளின் நலன் மற்றும் நீடித்த சுகாதார முறை ஆகியவற்றுக்கிடையே சமச்சீர் நிலையை உருவாக்க இக்கொள்கை கோருகிறது. அரிய நோய்கள் விஷயத்தில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பங்கு இருப்பதையும் இக்கொள்கை எடுத்துரைக்கிறது: அங்கீகரிக்கிறது.
இந்தியாவில் அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கு நிதிவழங்கும் முறை தேசியக் கொள்கையில் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
- அரிய மரபுசார் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதிக்காக 100 கோடி ரூபாய் ஆரம்பத் தொகையுடன் மத்திய அரசு நிலையில் ஒரு தொகு நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.
- இதே போன்ற தொகு நிதியம் மாநில அளவிலும் அமைக்கப்படும். மத்திய தொகுப்பிலிருந்து 60:40 என்ற விகிதத்தில் மாநில தொகு நிதியத்திற்கு மத்திய அரசால் நிதி வழங்கப்படும்.
- பெருந்தொகையைக் கொண்டும் மாநிலங்கள் தொகு நிதியத்தை அமைக்கலாம். மாநிலங்களுக்கான நிதித் தேவையை பிஐபி (PIP) நடைமுறையின்படி இருக்கும்.
மத்திய (சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை) இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் இதனைத் தெரிவித்தார்.
*******
(रिलीज़ आईडी: 1505345)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English