விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது:-
Posted On:
25 JUL 2017 4:05PM by PIB Chennai
- மண்வள அட்டை (எஸ்எச்சி) திட்டம் விவசாயிகள் தங்களின் நிலத்தில் உள்ள அதிகமாகவும் குறைவாகவும் உள்ள சத்துக்களை அறிந்துகொள்ள முடியம். இது உரமிடுதலை கவனத்துடன் பயன்படுத்துவதை உறுதிசெய்யும். இடுபொருட்களின் செலவு குறை மண்வளத்தை அதிகப்படுத்தும்.
- யூரியா பயன்பாட்டை முறைப்படுத்தவும் பயிர்களுக்கு அதன் இருப்பை விரிவுபடுத்தவும் உரமிடுதல் செலவைக் குறைக்கவும் வேம்பு கலக்கப்பட்ட யூரியா பயன்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கப்படும். உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட யூரியா மொத்தமும் தற்போது வேம்பு கலக்கப்பட்டுள்ளது.
- பாரம்பரிய விவசாய நலத்திட்டம் (பிகேவிஒய்) அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மண்வளத்தையும் இயற்கைப் பொருள்களையும் அதிகப்படுத்தும். ஊக்கவிலை கிடைப்பதால் விவசாயியின் மொத்த வருமானம் அதிகரிக்கும்.
- பயிரிடப்படும் நிலப்பரப்பை விரிவாக்க, நீர்ப்பாசன உத்தரவாதம், தண்ணீர் வீணாவதைக் குறைத்தல், தண்ணீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றுடன் பிரதம மந்திரியின் க்ருஷி சிஞ்சாய் யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) அமல்படுத்தப்படுகிறது.
- தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (e-NAM) 14-04-2016ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தேசிய அளவில் இணைய வழி சந்தைக்கான முன்முயற்சியை எதிர்நோக்கி உள்ளது. 2018 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 585 சந்தைகளில் இணைய வழி சந்தைக்கான கட்டமைப்பை உருவாக்க இது உதவியாக இருக்கும். இதுவரை 13 மாநிலங்களில் உள்ள 455 சந்தைகள் e-NAM உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதுமையான சந்தை நடைமுறை நல்ல விலையைக் கண்டறியவும் வெளிப்படைத்தன்மைக்கும் திறமை மிக்க விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் போட்டியிடுவதற்கு ”ஒரு நாடு ஒரே சந்தை” என்பதை நோக்கி முன்னேறவும் உதவும் என்று கருதப்படுகிறது.
- 2016 கரீஃப் (குறுவை) பருவத்திலிருந்து பிரதம மந்திரியின் ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்) அமலாக்கப்படுகிறது. குறைந்த விகிதங்களிலான பிரீமியத்துடன் விவசாயிகளுக்கு இது கிடைக்கம், குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் ஏற்படும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் உட்பட பயிர் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் இந்தத் திட்டத்தில் காப்பீடு கிடைக்கும்
- மூன்று லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய காலப் பயிர்க்கடனுக்கு 3% வட்டி உதவித் தொகையை அரசு வழங்குகிறது. தற்போது ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்படுகிறது. முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு 4 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கைச் சீற்றங்களின் போது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக வட்டி உதவித்தொகை 2016-17ன் கீழ் மறுசீரமைப்புத் தொகையிலிருந்து முதலாம் ஆண்டுக்கு வங்கிகளுக்கு வழங்கப்படும் 2% வட்டி உதவித் தொகை தொடரும். விவசாயிகளால் அவல விலைக்கு விற்கப்படுவதைத் தடுப்பதற்காகவும், உணவுக்கிடங்கில் தங்களின் விளை பொருட்களை இருப்பு வைப்பதை ஊக்கப்படுத்தவும், கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும், அறுவடைக்குப்பின் ஆறு மாதங்களுக்கு, பயிர்க்கடனுக்குக் கிடைக்கம் வட்டிவிகிதம் போல் வட்டி ஊக்கத் தொகை பயன் கிடைக்கும்.
- மாநிலத்தில் உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதற்கான கவனம் தேவைப்படும் இடங்களில் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) வை தொடர்ந்து அமலாக்க மாநில அரசுகளால் முடியும். இந்தத்திட்டத்தின் கீழ் மாநிலங்களின் தேவை, முன்னுரிமை, மற்றும் வேளாண் பருவ நிலைக்கு ஏற்ப நெகிழ்ச்சித்தன்மை, தெரிவுக்கான சுயாட்சி, திட்ட ஏற்பு, திட்டங்களின் செயல்பாடு ஆகியவை அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- அரிசி, கோதுமை, பயறுவகைகள் மோட்டாரக தானியங்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க நாடு முழுவதும் உள்ள 29 மாநிலங்களைச் சேர்ந்த 683 மாவட்டங்களில் மத்திய ஆதரவிலான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் (என்எஃப்எஸ்எம்) கீழ் பயிறு வகைகள் விநியோகம், 25 மாநிலங்களின் 194 மாவட்டங்களில் அரிசி விநியோகமும் 28 மாநிலங்களின் 265 மாவட்டங்களில் மோட்டாரக தானியங்கள் வழங்கலும் அமலுக்கு வந்துள்ளன. விதைகள் விநியோகம் (எச்ஒய்விக்கள்/வீரிய வித்துக்கள்), ஐஎன்எம், ஐபிஎம் தொழில் நுட்பங்கள், ஆதாரவளங்கள் பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள்/கருவிகள்/பண்ணைக் கருவிமயம், திறன்மிக்க நீர்பயன்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றுக்கும் பயிரிடும் முறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கும் என்எஃப்எஸ்எம் கீழ் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும்.
- எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணைப் பனைக்கான தேசிய இயக்கம் (என்எம்ஒஒபி) 2014-15 லிருந்து அமலாக்கப்படுகிறது. சமையல் எண்ணெயில் உள்ளூர்த் தேவையை சமாளிப்பதற்கு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பது எம்என்ஓஓபி.யின் நோக்கமாகும். இந்த இயக்கத்தின் பல்வேறு துணைத் திட்டங்கள் மாநில வேளாண்/தோட்டக் கலைத்துறை மூலம் அமலாக்கப்படுகின்றன.
- பழங்கள், காய்கறிகள் , வேர் மற்றும் கிழங்குப் பயிர்கள், காளான்கள், வாசனைப்பொருட்கள், பூக்கள், நறுமணச் செடிகள், தேங்காய், முந்திரி, கோகோ, மூங்கில் போன்றவற்றை பெருவதற்காக மத்திய அரசின் ஆதரவிலான ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் (எம்ஐடிஎச்) 2014-15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தோட்டக் கலை இயக்கம் (என்எச்எம்), வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கான தோட்டக்கலை இயக்கம் (எச்எம்என்இஎச்), தேசிய தோட்டக்கலை வாரியம் (என்எச்பி) தேங்காய் மேம்பாட்டு வாரியம் (சிடிபி) நாகாலாந்தில் உள்ள தோட்டக்கலைக்கான மத்தியக் கல்விக்கழகம் ஆகியவையும் இந்த இயக்கத்தில் அடங்கும். எம்ஐடிஎச்-ல் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றள்ளன.
விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்த அரசால் எடுக்கப்பட்டுள்ள மற்ற நடவடிக்கைகள் கீழ்வருமாறு:
- புதிய மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைச்சந்தை (மேம்படுத்துதல் & எளிமையாக்குதல்) சட்டம், 2017-ஐ அரசு வரைவு செய்தது. மாநிலங்கள் இதனை ஏற்று அவர்களின் சட்ட மன்றங்கள் மூலம் சம்பந்தப்பட்ட சட்டங்களை நிறைவேற்றுவதற்காக 24.04.2017 அன்று வெளியிடப்பட்டது. தனியார் சந்தைகள் நேரடி சந்தை, விவசாயி-நுகர்வோர் சந்தைகள், சிறப்பு தானியச் சந்தைகள், அறிவிக்கப்பட்ட கிடங்குகள்/பதனப்பெட்டிகள்/குளிர்பதனக் கிடங்குகள் அல்லது இது போன்ற அமைப்புகள் சந்தைத் துணைகளங்களாக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகள் உட்பட தற்போது ஏபிஎம்சி ஒழுங்குபடுத்தும் சந்தைக்கள் தவிர மாற்று சந்தைகளுக்கான தேர்வுகள் இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் உற்பத்தியாளர் மற்றும் வாங்குவோருக்கு இடையேயான தரகர்களின் எண்ணிக்கைக் குறையும் நுகர்வோரின் ரூபாயில் விவசாயியின் எண்ணிக்கைக் குறையும் நுகர்வோரின் ரூபாயில் விவசாயியின் பங்கு அதிகரிக்கும்
- எம்எஸ்பி செயல்பாடுகள் மூலம் கோதுமையையும் நெல்லையும் அரசு கொள்முதல் செய்கிறது. கூடுதலாக, மாநில/யூனியன் பிரதேச அரசு வேண்டுகோளின் படி குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் வராத வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பொருள்கள் கொள்முதலுக்கு சந்தைத் தலையீட்டுத் திட்டத்தை (எம்ஐஎஸ்) அரசு செயல்படுத்துகிறது.
- கரீஃப் மற்றும் ரபி பயிர்களுக்கு வேளாண் செலவுகள் & விலைகள் ஆணையத்தின் (சிஏசிபி) பரிந்துரைகள் அடிப்படையில் எம்எஸ்பி அறிவிக்கப்படுகிறது. இந்த ஆணையம் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரங்களைத் திரட்டி, பகுப்பாய்வு செய்து எம்எஸ்பிக்குப் பரிந்துரைக்கிறது. நாட்டின் பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட எம்எஸ்பிக்கு கூடுதலாக 2017-18 கரீஃப் பயிருக்கான போனசை அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டிலும் பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு எம்எஸ்பிக்குக் கூடுதலாக அரசு போனஸ் அறிவித்தது.
அரசு செயல்படுத்தும் விலை நிலைப்படுத்தல் நிதியம், இந்திய உணவுக்கழக செயல்பாடுகள் போன்ற மற்ற சந்தைத் தலையீடுகள் கூட விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் முயற்சிகளில் துணைபுரிகின்றன.
மேலே கூறப்பட்டவை தவிர விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தேனி வளர்த்தல் போன்ற துணை நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்துகிறது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
*****
(Release ID: 1505338)
Visitor Counter : 114