பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய (SHe-Box என்ற) பாலியல் தொந்தரவு மின்னணுப் பெட்டி என்ற இணையப் பக்கத்தை திருமதி மேனகா சஞ்சய் காந்தி துவக்கி வைத்தார்.
பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவு தொடர்பான பிரச்சனையின் பரிமாணத்தை மதிப்பிட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் (WCD) அகில இந்திய அளவில் ஆய்வு நடத்தியது.
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2017 3:29PM by PIB Chennai
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய பாலியல் தொந்தரவு மின்னணுப் பெட்டி (SHe-Box) என்ற இணையத்தில் புகார் நிர்வாக மேலாண்மை முறையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி புதுடில்லியில் தொடங்கி வைத்தார். 2013 ஆம் ஆண்டின் பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவு (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்ப்பு) சட்டத்தின் (SH ACT) தீவிர அமலாக்கத்தை உறுதி செய்ய இந்தப் புகார் நிர்வாக முறை உருவாக்கப்பட்டது.
மத்திய அரசில் (மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் இன்ன பிறவற்றில்) பணிபுரியம் அல்லது பணிநிமித்தம் செல்லும் பெண்கள் எஸ்எச் சட்டத்தின் கீழ் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு மேடையைத் தரும் முன் முயற்சியாக இந்த இணையப் பக்கம் உள்ளது. எஸ்எச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட உள் நிலைப் புகார்க்குழு (ஐசிசி) விடம் ஏற்கெனவே எழுத்துப் பூர்வமான புகார்கொடுத்திருப்பவர்களும் இந்த இணையப் பக்கத்தின் மூலம் புகார் பதிவு செய்யத் தகுதி பெற்றவர்கள் ஆவர். எஸ்எச்இ பாக்ஸ் இணையப் பக்கத்தை கீழ்க்காணும் இணைய முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்; http://www,wcd-sh.nic.in/
துவக்க விழாவில் பேசிய திருமதி மேனகா சஞ்சய் காந்தி தற்போது இந்த வசதி மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் விரைவில் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கும் இந்த இணையப் பக்க வசதி விரிவு படுத்தப் படும் என்றார்.
பணியிடங்களில் பெண்களுக்கு அதிகபட்சம் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்தப் பிரச்சனையின் பரிமாணத்தை மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளும் என்று அத்துறைக்கான அமைச்சர் தெரிவித்தார்.
எஸ்எச் சட்டத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு விரைவான தீர்வு கிடைக்க இந்த இணையப்பக்கம் ஒரு முயற்சியாகும். இதில் ஒரு முறை புகார் சமர்ப்பிக்கப்பட்டால் புகார் பற்றி விசாரிக்கும் வரம்பெல்லை கொண்ட அமைச்சகம்/துறை/பொதுத்துறை நிறுவனம்/தன்னாட்சி அமைப்பு மற்றும் இன்ன பிறவற்றில் உள்ள ஐசிசிக்கு நேரடியாக அனுப்பப்பட்டுவிடும். இந்த இணையப் பக்கம் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் அதே போல் புகார்தாரரும் ஐசிசியால் நடத்தப்படும் விசாரணை நடவடிக்கையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க முடியம்.
நாட்டிலேயே மத்திய அரசு தனது பல்வேற பணிகளைச் செயல்படுத்துவதற்காக அதிகபட்ச ஊழியர்களாக 30.87 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ளது. 2011 மத்திய அரசு ஊழியர்கள் கண்க்கெடுப்புப்படி வரன் முறையான மொத்த மத்திய அரசு ஊழியர்களில் 10.93% (3.37 லட்சம்) பேர் பெண்கள்.
பணியிடத்தில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவைத் தடுக்கும் சட்ட அமலாக்கத்தை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மேற் கொண்டுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை எளிமையாக நடைமுறையில் பயன்படுத்துவதற்கான தகவல் தரும் நோக்கத்துடன் எஸ்எச் சட்டம் பற்றிய கையேட்டினை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் எஸ்எச் சட்ட அம்சங்கள் பற்றி அரசு அலுவலர்கள் நன்கு அறிந்து கொள்ளவும் அவற்றைப் அமல்படுத்துவதற்குப் பணி சார்ந்த திறமையை உருவாக்கவதற்கும் புதுடில்லியில் உள்ள புள்ளியியல் பயிற்சி மற்றும் நிர்வாகக் கல்விக் கழகத்துடன் (ஐஎஸ்டி-எம் உடன்) இணைந்து பயிற்சி அலகு ஒன்றை அமைச்சகம் தயாரித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் அமைக்கப்பட்டுள்ள உள்நிலைப்புகார்க் குழுவின் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கை ஐஎஸ்டிஎம்-உடன் இணைந்து 2017 மே 5 அன்று அமைச்சகம் நடத்தியது.
இது தவிர நாடு முழுவதும் உள்ள அமைப்பு சார்ந்த/அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களில் இந்தச் சட்டம் பற்றி பரவலான விழிப்புணர்வை உருவாக்க, எஸ்எச் சட்டம் பற்றி பயிற்சி அளித்தல், பயிலரங்கு நடத்துதல் போன்று புரிதலை மேம்படுத்தும் நிகழ்வுகளை நடத்த விருப்பமுள்ள 29 வள ஆதார நிறுவனங்களை மகளிர் மற்றம் குழந்தைகள் நலத்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பட்டியல் கீழ்க் காணும் இணைய முகவரியில் கிடைக்கும்.
தொடர்புக்கு: http://wed.nic.in/act| recommended- panel – institutes – or – organizations – under – sexual – harassment – women – workplace
2013 ஆம் ஆண்டின் பணியிடத்தில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு (தடுத்தல், தடைசெய்தல் மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் பற்றி இரண்டு நாள் பயிலரங்கிற்கான பயிற்சி அலகு பற்றிய தொடர்புக்கு: http://wcd.nic.in/act./training- module - two - day – workshop – sexual – harassment – women – workplace – prevention – prohibition – and redressal
பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்களும் அமைப்புகளும் தங்களின் அறிதல் மேம்பாட்டு நடவடிக்கைகளை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ள எஸ்எச்இ-பாக்ஸ் ஒரு தனித்தளத்தைப் பெற்றிருக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். தற்போது வரை, பெறபட்டுள்ள அறிக்கைகளின் படி, கடந்த 5 மாதங்களில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்களும் அமைப்புகளும் கம்பெனிகளும் 35 அறிதல் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவற்றில் சுமார் 1700 பேர் பங்கேற்றுள்ளனர். எந்த ஒரு டிஜிட்டல் சமூகத்திலும் பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலை நோக்கினை மெய்ப்பிக்கும் திசையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என இலக்கை அடைவதற்கு தகவல் மற்றும் தொடர்புத் தொழில் நுட்பப் பயன்பாட்டை இந்த அமைச்சகம் அதிகப்படுத்தி வருகிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு டிஜிட்டல் வெளியைப் பயன்படுத்தும் முயற்சியாகும் இது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கான இணையமைச்சர் திருமதி கிருஷ்ணா ராஜ், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயலாளர் திரு ராகேஷ் பரூவஸ்தவா அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அதன் இணை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் துவக்க விழாவில் பங்கேற்றனர்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1505336)
வருகையாளர் எண்ணிக்கை : 230