பிரதமர் அலுவலகம்

நர்மதா ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர், பரூச் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

Posted On: 08 OCT 2017 7:31PM by PIB Chennai

நர்மதா ஆற்றின் குறுக்கே பத்புத் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதன் அடையாளமாக பெயர்ப்பலகையை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். பரூச் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர், உத்னா (சூரத், குஜராத்) மற்றும் ஜெய்நகர் (பீகார்) இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், குஜராத் நர்மதா உரக் கழக நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளை தொடங்கிவைத்ததுடன், அடிக்கல் நாட்டுவதன் அடையாளமாக பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை தொடங்கியது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று தெரிவித்தார். இது மக்களை இணைக்கிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம் அல்லது பீகாரைச் சேர்ந்த மக்களுக்கும், தங்களது வீட்டிலிருந்து மிக தொலைவுக்கு சென்று பணியாற்றிவரும் மக்களுக்கும் உதவுவதாக அவர் கூறினார். இந்த ரயில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்கள், சத் பூஜைக்காக தங்களது வீடுகளுக்கு செல்வதை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வேப்ப எண்ணெய் கலந்த யூரியா விவசாயிகளுக்கு உதவும் என்றும், ஊழலையும், திருட்டையும் தடுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கால்நடை பராமரிப்புத் துறையில் குஜராத்தின் முன்னேற்றம், விவசாயிகளுக்கு உதவுகிறது என்று திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்துக்கு குழுவை அனுப்பிவைத்து, பசு ஆரோக்கிய திருவிழாக்களை அறிந்துகொள்ளுமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதேபோல திருவிழாவுக்கு வாரணாசியில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இதனைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
 

***

 



(Release ID: 1505327) Visitor Counter : 97


Read this release in: English